1993 ஆம் ஆண்டு வெளியான ‘புதிய முகம்’ படத்தின் மூலம் இயக்குநர் மற்றும் ஹீரோவாக அறிமுகமான சுரேஷ் மேனன், அப்படத்திற்குப் பிறகு சில படங்களை தயாரித்து இயக்கியவர், திடீரென்று சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தார்.
இந்த நிலையில், ‘சோலோ’ மற்றும் சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் மூலம் நடிகராக ரீ எண்ட்ரியாகியிருப்பவருக்கு ஏகப்பட்ட படங்கள் கையில் இருக்கிறது. ’தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் அவரது நடிப்பு பலரால் பாராட்டப்பட்ட நிலையில், விஜய் சேதுபதியின் ‘ஜுங்கா’, ‘காளிதாஸ்’, ‘4ஜி’ என பல படங்களில் நடித்து வருபவர், விரைவில் ‘புதிய முகம்’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவும் தயாராகி வருகிறார்.
சினிமாவில் இருந்து சுரேஷ் மேனன் ஒதுங்கியிருந்த காலக்கட்டத்திலேயே அவரை நடிக்க வைக்க பலர் அனுகினாலும், அவரை எந்த கதையும் ஈர்க்காததால் அவர் அனைத்து வாய்ப்புகளையும் தவிர்த்தே வந்தாராம். பிறகு சோலோ மற்றும் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் அவரது கதாபாத்திரம் சிறப்பாக இருந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டவர், தற்போது வரும் இளம் இயக்குநர்கள் சிறப்பான, துணிச்சலான கதாபாத்திரங்களை எழுதுவதினாலேயே தற்போது தான் பல படங்களில் நடித்து வருகிறேன், என்று கூறினார்.
தமிழ் சினிமா துணிச்சலான கதைகள் வரும் ஒரு சிறப்பான கட்டத்தில் இயங்கி வருகிறது, என்று கூறியவர், எதிர்காலத்தில் இது போல சிறப்பான, அர்த்தமுள்ள அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிக்க ட் ஹயாராக இருப்பதகாவும், தெரிவித்துள்ளார்.
மேலும், ’புதிய முகம்’ இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டிருப்பவர், அதற்காக எந்தவித அவசரமும் படமால் நேரம் வரும்போது தொடங்க முடிவு செய்திருக்கிறார். அதுவரை நடிகராக சினிமாவிவ் பயணிப்பதோடு, பல்வேறு சமூக விஷயங்களிலும் தன்னை ஈடுபடுத்துக்கொண்டு வருகிறார்.
தற்போது சென்னை காவல்துறைக்காக போக்குவரத்து மேலாண்மை அமைப்பில் தனது நேரத்தை செலவழித்து வரும் சுரேஷ் மேனன், கழிவறைகள் வடிவமைப்பது, கட்டுவது என சமூக செய்லபாடுகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு வருகிறார்.
’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...
வ. கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தில் வ...
’கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், தற்போது நாயகனாக பலதரப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்று வருகிறார்...