டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் வசூலிக்கும் கட்டணத்தை குறைக்க வேண்டும், என்பதை வலியுறுத்தி தயாரிப்பாளர்கள் சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தி வருகிறது. அதே சமயம், திரையரங்க உரிமையாளர்கள் சிலர், நடிகர்கள் வாங்கும் சம்பளத்தை குறைத்தாலே தயாரிப்பாளர்களின் பெரிய சுமை குறையும், என்று கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில், நடிகர் மாதவன் தனது சம்பளத்தை உயர்த்திவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் இந்தி படங்களில் நடித்து வரும் மாதவன், தமிழில் ஆண்டுக்கு ஒரு படம் அல்லது இரண்டு ஆண்டுக்கு ஒரு படம் நடித்தாலும், அவரும் கோடியில் தான் சம்பளம் வாங்குகிறார்.
இதற்கிடையே, அவர் தமிழியில் கடந்த நடித்த ‘இறுதிச் சுற்று’ மற்றும் ‘விக்ரம் வேதா’ என இரண்டு படங்களும் வசூல் ரீதியாக பெரிய வெற்றி பெற்றதால், தற்போது மாதவனுக்கு தமிழில் பலமான மார்க்கெட் உருவாகியுள்ளது. இதனைக் காரணம் காட்டி அவர் தனது சம்பளத்தை உயர்த்தும் முடிவுக்கு வந்திருக்கிறாராம்.
கதை நன்றாக இருந்தால் சம்பளம் குறித்து எதுவும் பேசாமல் நடிக்க சம்மதம் தெரிவித்து வந்த மாதவன், தற்போது சம்பளத்தை உயர்த்தியதோடு மட்டும் அல்லாமல் தற்போது கதையைக் காட்டிலும் தான் கேட்கும் ரூ.4 கோடி சம்பளத்தை கொடுத்தால் கால்ஷீட் உடனே கொடுப்பேன், என்கிறாராம். மாதவனின் இத்தகைய முடிவால் நல்ல கதையை வைத்துக் கொண்டு அவரை அனுகும் சில தயாரிப்பாளர்கள் அப்செட்டாகி திரும்புவதாக கூறப்படுகிறது.
’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...
வ. கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தில் வ...
’கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், தற்போது நாயகனாக பலதரப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்று வருகிறார்...