‘காற்று வெளியிடை’ படத்திற்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் படத்திற்கு ‘செக்க சிவந்த வானம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
அரவிந்த்சுவாமி, விஜய் சேதுபதி, சிம்பு, ஜோதிகா ஆகியோர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், திரைத்துரையின் வேலை நிறுத்தப் போராட்டத்தினால் தற்போது பாதியிலேயே நிற்கிறது.
பல நடிகர் நடிகைகள் நடிக்கும் இப்படத்தின் கதை என்னவாக இருக்கும், யார் யாருக்கு எந்த மாதிரியான கதாபாத்திரம் இருக்கும், என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டிருக்கும் நிலையில், அரவிந்த்சுவாமிக்கு ஜோடியாக ஜோதிகா நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அரவிந்த்சுவாமி, ஜோதிகா ஆகியோரது காம்பினேஷன் காட்சிகளை வட மாநிலங்களில் படமாக்க திட்டமிட்டுள்ள மணிரத்னம், திரைத்துறை வேலை நிறுத்தம் முடிந்த பிறகு வட மாநிலங்களுக்கு பயணிக்க முடிவு செய்துள்ளாராம்.
’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...
வ. கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தில் வ...
’கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், தற்போது நாயகனாக பலதரப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்று வருகிறார்...