தனக்கு ரசிகர்களும், ரசிகர் மன்றமும் தேவையில்லை என்று சொல்வதோடு, தான் நடிக்கும் படங்களின் புரோமோஷன்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூட கலந்துக்கொள்ள மாட்டேன், என்று அஜித் சொன்னாலும், அவரை வைத்து படம் தயாரிக்க தயாரிப்பாளர்கள் வரிசைக்கட்டி நிற்பதோடு, அவருக்காக எதையும் செய்யும் ரசிகர்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
அதே சமயம், தன்னை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு நஷ்ட்டம் ஏற்பட்டால், அவர்களுக்கு தொடர்ந்து கால்ஷீட் கொடுத்து அவர்களை காப்பாற்றும் எண்ணம் கொணவர் தான் அஜித். ஏ.எம்.ரத்னத்திற்கும் இந்த அடிப்படையில் தான் அஜித் தொடர்ந்து இரண்டு படங்களுக்கு கால்ஷீட் கொடுத்தார். அதேபோல், விவேகம் படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜனுக்கும் தற்போது ‘விஸ்வாசம்’ படத்தை தயாரிக்கும் வாய்ப்பை கொடுத்திருக்கிறார். விவேகம் படம் தோல்வியடைந்ததால் தான் மீண்டும் சத்யயோதி நிறுவனத்தில் அஜித் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், அஜித்தை ‘அமராவதி’ படம் மூலம் அறிமுகம் செய்து வைத்த தயாரிப்பாளரும் தற்போது பெரும் கஷ்ட்டத்தில் இருக்கிறாராம். அதனால், அவருக்கு அஜித் உதவி செய்ய வேண்டும் என்று சில தயாரிப்பாளர்கள் கூறி வருகிறார்களாம். ஆனால், இதுவரை அதைக் கண்டுக்கொள்ளாத அஜித் இனியாவது அவருக்கு உதவி செய்வாரா, என்பதை பார்ப்போம்.
’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...
வ. கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தில் வ...
’கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், தற்போது நாயகனாக பலதரப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்று வருகிறார்...