தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரேயா, பட வாய்ப்புகள் குறைந்ததால் தனது ரஷ்ய நாட்டு காதலரை ரகசிய திருமணம் செய்துக் கொண்டார்.
ஸ்ரேயாவின் திருமணத்தில் அவரது அம்மாவுக்கு விருப்பம் இல்லாததால் தான் அவர் அறிவித்த தேதிக்கு முன்பாகவே திருமணம் செய்துக் கொண்டார் என்று கூறப்பட்டது. திருமணத்திற்குப் பிறகு ஸ்ரேயா ரஷ்யா செல்வாரா அல்லது இந்தியாவில் தான் இருப்பாரா, என்பது பெரிய கேள்விக் குறியாக இருந்த நிலையில், மூத்த நடிகர் ஒருவருக்கு ஜோடியாக ஸ்ரேயா சம்மதம் தெரிவித்துள்ளார்.
ஆம், தெலுங்குப் படம் ஒன்றில் வெங்கடேஷுக்கு ஜோடியாக நடிக்க ஸ்ரேயா சம்மதம் தெரிவித்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு நடிப்பது குறித்து எதுவும் சொல்லாத ஸ்ரேயா, தற்போது படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பது அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
வெங்கடேஷுக்கு ஜோடியாக நடிக்க பல நடிகைகள் மறுத்துள்ளனர். இதனால் படப்பிடிப்பை தொடங்காமல் தவித்த இயக்குநர் தேஜா, மும்பையிலும் ஹீரோயின் தேட, அங்கேயும் நோ என்ற வார்த்தை தான் பதிலாக கிடைத்திருக்கிறது. இதனால் இறுதியாக ஸ்ரேயாவிடம் கேட்க, அவர் உடனே ஓகே சொல்லிவிட்டாராம்.
மொத்தத்தில், தனது ஹனிமூனை கேன்சல் செய்துவிட்ட ஸ்ரேயா, மூத்த நடிகரான வெங்கடேஷுடன் டூயட் பாட தயாராகிவிட்டாரம்.
’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...
வ. கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தில் வ...
’கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், தற்போது நாயகனாக பலதரப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்று வருகிறார்...