Latest News :

கிடா விருந்துடன் நிறைவுப் பெற்ற ‘தொட்ரா’ படப்பிடிப்பு!
Saturday March-24 2018

பிருத்வி ராஜன், அறிமுக நாயகி வீணா ஹீரோ ஹீரோயினாக நடிக்கும் படம் ‘தொட்ரா’. சர்ச்சையான விஷயத்தை பற்றி பேசியிருக்கும் இப்படத்தில் ஏ.வெங்கடேஷ், எம்.எஸ்.குமார், கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ், தீப்பெட்டி கணேசன், குழந்தை நட்சத்திரம் அபூர்வா சஹானா ஆகியோர் நடித்துள்ளனர்.

 

ஜெ.எஸ்.அபூர்வா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ஜெய் சந்திரா சரவணகுமார் தயாரித்துள்ள இப்படத்தை மதுராஜ் இயக்கியுள்ளார். உத்தமராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் நடிகர் சிம்பு ஒரு பாடல் பாடியுள்ளார்.

 

பழனி, பொள்ளாச்சி, கிருஷ்ணகிரி, கரூர் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வந்த இப்படத்தின் இறுதிக்கட்ட காட்சிகள் மட்டும் படமாக்கப்படாமல் இருந்தது. 

 

இந்த நிலையில், இப்படத்தின் இறுதிக்கட்ட காட்சியை பழனியில் 5 நாட்கள் படமாக்கி முடித்துள்ளனர். பிருத்வி ராஜன், வீணா, எம்.எஸ்.குமார், மைனா சூசன் ஆகியோர் இதில் கலந்துக்கொண்டார்கள். இவர்களுடன் 150 பேர் வரை இந்த படப்பிடிப்பில் கலந்துக்கொண்டுள்ளனர். 

 

இறுதிப் படப்பிடிப்பில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் தயாரிப்பாளர் ஜெய்சந்திரா சரவணகுமார் கிடா வெட்டி விருந்து வைத்துள்ளார். இரவு விருந்தாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கிடா விருந்தோடு, மகிழ்வாக படப்பிடிப்பு நிறைவடைந்தது. இத்துடன், சாலை ஓரம் உள்ள ஆதரவற்றவர்களுக்கும் உணவு பொட்டலங்களை ‘தொட்ரா’ படக்குழுவினர் வழங்கி அவர்களையும் மகிழ்வித்துள்ளனர். 

 

ஏற்கனவே எடுக்கப்பட்ட காட்சிகள் அனைத்தும் எடிட்டிங், டப்பிங் என்று பின்னணி வேலைகள் முடிக்கப்பட்டு தயாராக உள்ள நிலையில், தற்போது எடுக்கப்பட்ட காட்சிகளை அவற்றுடன் இணைத்துவிட்டால் போதும் படம் ரிலிஸுக்கும் தயாராகிவிடும்.

 

படத்தை வெகு விரைவாக நிறைவு செய்துக்கொடுத்த இயக்குநர் மதுராஜை பாராட்டிய தயாரிப்பாளர் ஜெய்சந்திரா சரவணகுமார் மற்றும் அவரது கணவர் எம்.எஸ்.குமார், தொடர்ந்து நல்ல படங்களை இயக்கும் இயக்குநராக மதுராஜ் வருவார். அவருக்கும், படத்தை விரைந்து முடிக்க உதவிய படக்குழுவினருக்கும் எங்களது நன்றிகள், என்று கூறினார்கள்.

Related News

2252

வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)
Sunday April-26 2026

உலகளாவிய கவனத்தை ஈர்த்து வரும் புகழ்பெற்ற ஆஸ்திரேலியா-தமிழ் பாடகி மற்றும் பாடலாசிரியரான தீ (Dhee), ‘வாரி வாரி’ என்ற புதிய, துணிச்சலான மற்றும் உணர்ச்சி மிக்க தனிப்பாடலுடன் மீண்டும் ரசிகர்களை சந்தித்துள்ளார்...

'பிளாஸ்ட்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் ரவி பஸ்ரூர்!
Sunday April-26 2026

முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர்களுடன் மெகா பட்ஜெட் படங்கள், அறிமுக இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் புதிய டிரெண்டை தொடர்ந்து உருவாக்கும் படங்கள் என அடுத்தடுத்து  முத்திரை பதித்து வரும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 'கோட்', 'லவ் டுடே', 'டிராகன்' மெகா வெற்றிப் படங்களை தொடர்ந்து, 28வது படைப்பாக கல்பாத்தி எஸ்...

வாக்களிப்பதை ஊக்குவிக்கும் முயற்சியாக பி.எம்.ஜே. ஜுவெல்ஸ் அறிவித்த சிறப்பு சலுகை!
Sunday April-26 2026

தேர்தலில் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில், பி...

Recent Gallery