Latest News :

நிறைவு பெற்றது ‘மிஸ்டர் சந்திரமெளலி’ படப்பிடிப்பு!
Saturday March-24 2018

கார்த்திக்கும் அவரது மகன கெளதமும் முதல் முறையாக இணைந்து நடிக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமெளி’. திரு இயக்கும் இப்படத்தில் ரெஜினா கசண்ட்ரா ஹீரோயினாக நடிக்கிறார். இவர்களுடன் சதீஷ், வரலக்‌ஷ்மி சரத்குமார், இயக்குநர்கள் மகேந்திரன், அகத்தியன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

 

ஜி.தனஞ்செயன் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இரண்டு பாடல்கள் மட்டுமே படமாக்கப்பட இருந்தது. அப்பாடல்களை தாய்லாந்து நாட்டில் படமாக்க படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியது அவர்களுக்கு மிகவும் நெருக்கடியாக அமைந்தது. இருந்தாலும், ஒட்டு மொத்த படக்குழுவும் ஜெட் வேகத்தில் செயல்பட்டு, சங்கத்தின் கட்டுப்பாட்டையும் மீறாமல் இரண்டு பாடல்களை தாய்லாந்தில் மிக விரைந்து படமாக்கி முடித்துள்ளார்கள்.

 

இதனால் தயாரிப்பாளர் தனஞ்செயன் ரொம்பவே குஷியடைந்திருப்பதோடு, இயக்குநர் திரு, நடிகர்கள் கெளதம் கார்த்திக், ரெஜினா உள்ளிட்ட படக்குழு அனைவரையும் வெகுவாக பாராட்டியுள்ளார்.

Related News

2253

வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)
Sunday April-26 2026

உலகளாவிய கவனத்தை ஈர்த்து வரும் புகழ்பெற்ற ஆஸ்திரேலியா-தமிழ் பாடகி மற்றும் பாடலாசிரியரான தீ (Dhee), ‘வாரி வாரி’ என்ற புதிய, துணிச்சலான மற்றும் உணர்ச்சி மிக்க தனிப்பாடலுடன் மீண்டும் ரசிகர்களை சந்தித்துள்ளார்...

'பிளாஸ்ட்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் ரவி பஸ்ரூர்!
Sunday April-26 2026

முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர்களுடன் மெகா பட்ஜெட் படங்கள், அறிமுக இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் புதிய டிரெண்டை தொடர்ந்து உருவாக்கும் படங்கள் என அடுத்தடுத்து  முத்திரை பதித்து வரும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 'கோட்', 'லவ் டுடே', 'டிராகன்' மெகா வெற்றிப் படங்களை தொடர்ந்து, 28வது படைப்பாக கல்பாத்தி எஸ்...

வாக்களிப்பதை ஊக்குவிக்கும் முயற்சியாக பி.எம்.ஜே. ஜுவெல்ஸ் அறிவித்த சிறப்பு சலுகை!
Sunday April-26 2026

தேர்தலில் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில், பி...

Recent Gallery