தமிழ் மக்களிடம் பிரபலமான சீரியல்களில் ஒன்றான ‘தெய்வமகள்’ சீரியலில் கொடூர வில்லி வேடத்தில் நடித்தார் காயத்ரி. சீரியலில் ஹீரோயின் சத்யாவுக்கு நிகரான வலுவான கதாபாத்திரத்தில் நடித்த இவர் தற்போது முன்னணி சீரியல் நடிகைகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
ரேகா கிருஷ்ணப்பா என்பது தான் காயத்ரியின் உண்மையான பெயர். தெய்வமகள் சீரியலை தொடர்ந்து பல முன்னணி நிறுவனங்கள் தயாரிக்கும் சீரியல்களில் நடித்து வரும் இவர், சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், ரேகா கிருஷ்ணப்பா தன்னுடன் நடித்த நடிகர் ஒருவரால் அடிக்கடி அழ வைக்கப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, சீரியலில் ரொம்ப போல்டான பெண் வேடத்தில் நடித்தாலும் ரேகா, ரொம்பவே சென்சிட்டிவ் ஆனவராம்.
தெய்வமகள் சீரியலில் ரேகாவின் கணவராக குமார் வேடத்தில் நடித்த பிரகாஷ் அதிகம் கிண்டல் செய்வாராம். இதனால் சில நேரங்களில் ரேக கதறி அழுதுவிடுவாராம். அதேபோல், அவரது வீடியோவுக்கு கதாபாத்திரத்தை தாண்டி சிலர் தனிப்பட்ட முறையில் கொடுக்கும் கமெண்டுக்கு பதில் அளிக்க முயற்சி செய்து பிறகு செய்யாமல் விட்டுவிடுவாராம்.
இப்படி ரொம்ப பயந்தா சுபாவம் கொண்ட ரேகா கிருஷ்ணப்பா, சீரியல்களில் புலியாக நடித்தாலும் உண்மையில் எலியாம்.
உலகளாவிய கவனத்தை ஈர்த்து வரும் புகழ்பெற்ற ஆஸ்திரேலியா-தமிழ் பாடகி மற்றும் பாடலாசிரியரான தீ (Dhee), ‘வாரி வாரி’ என்ற புதிய, துணிச்சலான மற்றும் உணர்ச்சி மிக்க தனிப்பாடலுடன் மீண்டும் ரசிகர்களை சந்தித்துள்ளார்...
முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர்களுடன் மெகா பட்ஜெட் படங்கள், அறிமுக இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் புதிய டிரெண்டை தொடர்ந்து உருவாக்கும் படங்கள் என அடுத்தடுத்து முத்திரை பதித்து வரும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 'கோட்', 'லவ் டுடே', 'டிராகன்' மெகா வெற்றிப் படங்களை தொடர்ந்து, 28வது படைப்பாக கல்பாத்தி எஸ்...
தேர்தலில் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில், பி...