சினிமாவில் வாய்ப்புக்காக நடிகைகள் படுக்கைக்கு அழைக்கப்படுகிறார்கள், என்ற குற்றச்சாட்டு இருக்கும் நிலையில், சில நடிகைகள் சினிமா தவிர்த்து வேறு சிலராலும் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள்.
கடந்த ஆண்டு நடிகை பாவனா காரில் கடத்தப்பட்டு கற்பழிக்கப்பட்ட சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல், சமீபத்தில் நடிகை அமலா பாலுக்கு தொழிலதிபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், 68 வயது பிரபல பாலிவுட் நடிகை ஜீனத் அமனை தொழிலதிபர் ஒருவர் கற்பழித்துள்ள சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
1970 மற்றும் 80 களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ஜீனத் அமன், “தம்மர...தம்...” என்ற பாடலால் இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்த அவருக்கு தற்போது 68 வயதாகிறது. நடிப்பதை நிறுத்திவிட்ட ஜீனம் அமன், கடந்த ஜனவரி மாதம் மும்பையில் உள்ள ஜுகு போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்தார். அதில், தான் வீட்டில் தனியாக இருந்த போது தொழிலதிபர் ஒருவர் திடீரென்று தனது வீட்டுக்குள் புகுந்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றும் புகார் மனுவில் குற்ப்பிட்டிருந்தார்.

ஜீனத் அமன் புகாரின் அடிப்படையில் விசாரணையை தொடங்கிய போலீசார், அவரை பாலியல் பலாத்காரம் செய்தவரின் பெயர் சர்பராஷ் என்ற அமன் கன்னா என்பதையும், அவர் தொழிலதிபராக இருக்கிறார் என்பதையும் கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து தலைமறைவான் அந்த நபரை போலீசார் கைது செய்து நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினார்கள்.
இதற்கிடையே, ஜீனத் அமனும், அவரை பலாத்காரம் செய்த தொழிலதிபரும் ஒன்றாக சேர்ந்து தொழில் செய்தவர்கள் என்றும், கருத்து வேறுபாடு காரணமாக தற்போது அவர்கள் பிரிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...