கடந்த 13 வருடங்களாக தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக உள்ள நயந்தாரா, லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு, கோடம்பாக்கத்தில் வலம் வந்துக்கொண்டிருக்கிறார். முன்னணி ஹீரோக்களுடன் போட்டி போடும் அளவுக்கு ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் அவர், ஆண்டுக்கு 3 படங்களில் நடித்து விடுகிறார்.
இதற்கிடையே, இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வருபவர், தனது காதல் குறித்து வெளிப்படையாக எதுவும் கூறவில்லை என்றாலும், விக்னேஷ் சிவனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை அவ்வபோது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருவதோடு, தனது பிறந்தநாளன்று தனது காதலருடன் வெளிநாடுகளுக்கு சென்று சந்தோஷமாக இருந்துவிட்டு திரும்புகிறார்.
இந்த நிலையில், சென்னையில் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று சாதனை பெண்களுக்கு விருது வழங்கியது. இதில் சினிமாவில் சாதனை செய்தவர் என்ற அடிப்படையில் நயந்தாராவுக்கு விருது வழங்கப்பட்டது. இந்த விருதை நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பெற்றுக் கொண்ட நயந்தாரா தனது காதலருக்கு கெளரவம் சேர்க்கும் வகையில் நடந்துக்கொண்டார்.
விருதைப் பெற்றவர், தான் வாங்கிய விருதுகளில் இவ்விருது ரொம்பவே ஸ்பெஷலானது, என்று கூறியதோடு, இவ்விருதை வாங்க காரணமாக இருந்த அம்மா, அப்பா, சகோதர் மற்றும் எனது காதலருக்கு நன்றி, என்று தெரிவித்தார்.
இதுவரை தனது காதல் குறித்தும் தனது காதலர் குறித்தும் பேசாமல் இருந்த நயந்தாரா, முதல் முறையாக தனது காதலர் குறித்து பொது மேடையில் பேசியிருப்பதால் அவர் திருமணத்திற்கு தயாராகிவிட்டார் என்று கோடம்பாக்க வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
இருந்தாலும், விக்னேஷ் சிவனை ஹீரோவாக்க முயற்சித்து வரும் நயந்தாரா, தனது முயற்சியில் வெற்றி பெற்ற பிறகே திருமணம் செய்துக்கொள்வார் என்றும் கூறப்படுகிறது.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...