சென்னையை சேர்ந்த நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோயினாக உள்ளார். அவருக்கும், தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் மகனும், நடிகருமான நாகசைதன்யாவுக்கும் அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், தனக்கு நாகசைதன்யாவுடன் எப்போதோ திருமணம் ஆகிவிட்டது, என்று கூறி சமந்தா பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இது குறித்து சமந்தா அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறுகையில், “நான், நாகசைதன்யாவை முதன் முதலில் ‘ஏமாயசேசவே’ என்ற படத்துக்காக சந்தித்தேன். அப்போதே அவர் மீது எனக்குள் காதல் வந்துவிட்டது. தொடர்ந்து இருவரும் ஒருவருக்கொருவர் அன்பாகவே பழகிவந்தோம். மனதளவில் எனக்கு அவருடன் எப்போதோ திருமணம் ஆகிவிட்டது.
இப்போது என் வாழ்வில் அவரைவிட எனக்கு எதுவும் பெரிதில்லை. 30 வயதில் திருமணம் என்று முன்பே நினைத்திருந்தேன். அது இப்போது நடக்கிறது. திருமணத்துக்கு பிறகும் என் குணம் மாறாது.
திருமணமாகி நான் போக இருக்கும் குடும்பத்தினர், நான் நானாக இருக்கலாம் என்று அனுமதி அளித்து இருக்கிறார்கள். அது மிகவும் அழகானது.” என்று தெரிவித்துள்ளார்.
’கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், தற்போது நாயகனாக பலதரப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்று வருகிறார்...
சன்லைட் மீடியா எழுமலை ஏ.எஸ்...
லவ் பிலிம்ஸ் வழங்கும் லவ் ரஞ்சன் மற்றும் அங்கூர் கார்க் தயாரிப்பில் பிரபல இயக்குநர் ஜி...