கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. டிஜிட்டல் சேவை நிறுவனங்களின் அதிக கட்டண வசூலிப்பை குறைக்க வேண்டும், திரையரங்கத்தில் டிக்கெட் விலை ஒழுங்குப்படுத்துதல் போன்ற கோரிக்கைகளை முன் வைத்து தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தி வரும் இந்த போராட்டத்திற்கு ஆரம்பத்திலேயே ரஜினிகாந்த் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், செயலாளர் கதிரேஷன், பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் நேற்று ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து போராட்டம் குறித்து விளக்கி கூறியுள்ளனர்.
சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, போராட்டத்தின் அவசியத்தை விஷால் ரஜினியிடம் விளக்கி கூறினாராம். அனைத்தையும் கேட்டுக்கொண்ட ரஜினிகாந்த், இறுதியில் போராட்டத்தை கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், இந்த வேலை நிறுத்தத்தால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், தயாரிப்பாளர்களுக்கு நன்மை நடக்க வேண்டும் அதே சமயம் தொழிலாளர்களும் பாதிக்கப்பட கூடாது, என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...