தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் நடத்தி வரும் வேலை நிறுத்தப் போராட்டத்தால், சென்னை மட்டும் இன்றி வெளி ஊர்களிலும் எந்தவித படப்பிடிப்பும் நடைபெறவில்லை. இதை பயன்படுத்தி நடிகர்கள் பலர் தங்களது குடும்பத்தினருடன் வெளிநாடுகளுக்கு பறந்துவிட்டார்கள்.
அந்த வகையில், அஜித்தின் விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பும் வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு இல்லாத காரணத்தால் அஜித் தனது நீண்ட நாள் ஆர்வமான ஏரோ மாடலிங்கில் தனது கவனம் செலுத்தி வருகிறார். இது தொடர்பாக பிரதெயேக தொழில்நுட்பத்தைப் பற்றி தெரிந்துக்கொள்ள சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி கல்லூரியின் ஏரோ மாடலிங் துறைக்கு அஜித் விசிட் அடித்துள்ளார்.
இது குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள ஏரோ மாடலிங் துறை மாணவர்கள், அஜித்குமார் சமீபத்தில் ஏரோ மாடலிங் நவின குவாட்காப்டர் தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பைப் பற்றி மாணவர்களிடம் கேட்டுத் தெரிந்துக்கொண்டதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், சுமார் 12 மணி நேரம் காத்திருப்புக்கு பிறகு அஜித்தை சந்தித்த மாணவர்கள், அவரிடம் ”உங்களை சந்திப்பதற்காக 12 மணி நேரமாக காத்திருக்கிறோம்” என்று கூற, அதற்கு அஜித், ”உங்களை பார்க்க நான் 26 வருடங்களாக காத்திருக்கிறேன்” என்று பதில் கூறினாராம்.
அஜித்தின் இந்த பதிலை கேட்டு பரவசமடைந்த மாணவர்கள் உற்சாகத்தில் துள்ளி குதித்திருக்கிறார்கள். பிறகு அஜித் அவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.
’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...
வ. கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தில் வ...
’கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், தற்போது நாயகனாக பலதரப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்று வருகிறார்...