தொடர் தோல்விப் படங்களைக் கொடுத்து வந்த ஆர்யா, தற்போது அமீர் இயக்கத்தில் ’சந்தனதேவன்’ என்ற படத்தில் நடித்து வந்த நிலையில், திடீரென்று அப்படத்திற்கு பிரேக் கொடுத்துவிட்டு, பிரபல டிவி சேனல் ஒன்றில் பெண் தேடும் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.
16 பெண்கள் போட்டியாளர்களாக கலந்துக்கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியின் மூலம் ஒரு பெண்ணை தேர்வு செய்து திருமணம் செய்துக் கொள்ள இருப்பதக ஆர்யா தெரிவித்துள்ளார். தற்போது 16 பெண்களில் 8 பெண்கள் மட்டுமே போட்டியில் இருக்கும் நிலையில், இந்நிகழ்ச்சி குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு வருகின்றது.
இந்த போட்டியில் கலந்துக் கொள்ளும் பெண்களில் திருமணமாகி விவாகரத்து ஆனவர்கள், ஏற்கனவே குழந்தை உள்ளவர்கள், கரு கலைத்தவர்கள் என்று பலர் கலந்துக்கொள்ள, இவர்களுக்கு தனி தனியாக போட்டி வைத்து அவற்றில் வெற்றிபெறுபவர்களை அடுத்த கட்டத்திற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அழைத்துச் செல்கிறார்கள். இதுபோன்ற முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர்கள் சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த நிலையில், இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு சமீபத்தில் இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. அப்போது அங்கு வந்த சிலர் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியுள்ளனர். இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...