Latest News :

45 நாட்களில் முடிந்த ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ படப்பிடிப்பு!
Tuesday March-27 2018

கிளாப்போர்ட் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் பல தரமான படங்களை ரிலிஸ் செய்து வரும் வி.சத்தியமூர்த்தி, தயாரித்து வரும் படம் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’.

 

இப்படத்தை தயாரிப்பதோடு இதில் சத்யமூர்த்தி நடிக்கவும் செய்துள்ளார். அறிமுக இயக்குநர் ‘எருமசாணி’ புகழ் ரமேஷ் வெங்கட் இயக்கும் இப்படத்தில் ‘மெட்ராஸ் செண்ட்ரல்’ புகழ் கோபி, சுதாகர், எரும சாணி புகழ் விஜய், ஹரிஜா, புட் சட்னி புகழ் அகஸ்டின், டெம்பில் மங்கிஸ் புகழ் ஷா ரா, அப்துல் மற்றும் வி.ஜே ஆஷிக் ஆகியோர் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 

இப்படத்தில் பணியாற்றும் நடிகர், நடிகைகள் முதல் தொழில்நுட்ப கலைஞர்கள் வரை அனைவரும் 21 வயதிற்கு கீழ் இருப்பவர்கள் என்பது தனி சிறப்பு. இளம் கலைஞர்களின் தனித்துவமன படைப்பில் உருவாகும் இப்படத்திற்கு ஜோஸ்வா ஜே.பெரேஸ் ஒளிப்பதிவு செய்ய, கெளஷிக் கிரிஷ் இசையமைக்கிறார். தோபிக் - கணேஷ் படத்தொகுப்பு செய்கின்றனர்.

 

60 நாட்களில் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்ட நிலையில், முழு படத்தையும் வெறும் 45 நாட்களில் முடித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ரமேஷ் வெங்கட்.

 

இது குறித்து கூறிய நடிகரும் தயாரிப்பாளருமான வி.சத்தியமூர்த்தி, “எங்களின் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ படத்தில் பணியாற்றி இருக்கும் ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞர்களும், நடிகர் நடிகைகளும், தங்களின் முழு ஒத்துழைப்பை தந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. மேலும் யூடியூப் சமூக வலைதளத்தில் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் கலைஞர்கள் பலரை, ஒரே படத்தில் ஒன்று சேர்த்து இருக்கும் பெருமை எங்களின் கிளாப்போர்ட் தயாரிப்பு நிறுவனத்திற்கு கிடைத்திருக்கின்றது. அதுமட்டும் இன்றி, ஏராளமான இளம் ரசிகர்களை தங்களின் சிந்திக்க வைக்கும் நகைச்சுவை காணொளிகள் மூலம் கவர்ந்து வரும் எருமசாணி ஜோடி விஜய் - ஹரிஜா, கோபி - சுதாகர், அகஸ்டின், ஷா ரா, அப்துல் மற்றும் விஜே ஆஷிக் ஆகியோரை, முதல் முறையாக மிக முக்கியமான கதாபாத்திரங்களில் ரசிகர்கள் இந்த படத்தின் மூலம் காண எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். கோடை விருந்தாக வரும் மே மாதம் எங்கள் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளோம்.” என்றார்.

Related News

2275

’கே.டி. - தி டெவில்’ அனைவருக்கும் பிடித்த மாஸ் ஆக்‌ஷன் படமாக இருக்கும் - துருவ் சர்ஜா நம்பிக்கை
Saturday July-12 2025

கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான  KVN Productions வெங்கட் கே...

நடிகைகளை உருட்டும் இயக்குநர் நான் அல்ல! - ’உருட்டு உருட்டு’ பட விழாவில் விக்ரமன் பேச்சு
Saturday July-12 2025

ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ்  என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு  ஜெய்சங்கர் தயாரிப்பில்,   பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில்,  சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...

”’பீனிக்ஸ்’ நாயகன் சூர்யாவுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது” - இயக்குநர் அனல் அரசு புகழாரம்
Saturday July-12 2025

இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...

Recent Gallery