சதர் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் சஃபிக் தயாரித்திருக்கும் படம் ‘அமுதா’. திடுக்கிட வைக்கும் பல திருப்பங்கள் கொண்ட மியூசிக்கல் திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தை பி.எஸ்.அர்ஜுன் இயக்கியிருக்கிறார்.
ஸ்ரேயா ஸ்ரீ முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்க, அனீஷ் ஷா, லெவின் சைமன் ஜோசப், ஆஷ்னா சுதிர், அசிஸி ஜிப்சன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ராஜேஷ் பனங்கட் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அருண் கோபன் இசையமைத்திருக்கிறார்.
‘அமுதா’ படத்திற்கான கதையை 2016 ஆம் ஆண்டு எழுத ஆரம்பித்த இயக்குநர் பி.எஸ்.அர்ஜுன், கதை எழுத தொடங்கும் போது ஆரம்பத்தையும், முடிவையும் மட்டுமே எழுதி இருக்கிறார். பிறகு தான் படத்திற்கான மொத்த கதையையும் எழுதியிருக்கிறார்.
இப்படம் குறித்து இயக்குநர் கூறுகையில், “இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ‘கண்ணத்தில் முத்தமிட்டால்’ படத்தில் வரும் அமுதா என்கிற பெயரை தான் இப்படத்திற்கான தலைப்பாக வைத்திருக்கிறோம். காரணம், படத்தில் வரும் முக்கிய கதாபாத்திரத்தின் பெயர் சாதாரணமாக இல்லாமல், இதற்கு முன்பே அன்கு அறியப்பட்ட பெயராக இருக்க வேண்டும் என விரும்பினோம்.” என்றவரிடம், இது பேய் படமா? என்று கேட்டதற்கு, “நிச்சயமாக இது பேய்ப் படம் இல்லை. அதே நேரத்தில் பேய்ப் படத்தில் எந்த அளவுக்கு திகிலும், திருப்பங்களும் இருக்குமோ அதை விட அதிகமாகவே இந்தப் படத்தில் நீங்கள் எதிர்ப்பார்க்கலாம்.” என்றார்.
முழு படப்பிடிப்பும் முடிந்த நிலையில், வெளியீட்டிற்கான இறுதிக்கட்டப் பணியில் உள்ள ‘அமுதா’ இந்த ஆண்டு ஜூன் மாத இறுதிக்குள் திரைக்கு வர உள்ளது.
உலகளாவிய கவனத்தை ஈர்த்து வரும் புகழ்பெற்ற ஆஸ்திரேலியா-தமிழ் பாடகி மற்றும் பாடலாசிரியரான தீ (Dhee), ‘வாரி வாரி’ என்ற புதிய, துணிச்சலான மற்றும் உணர்ச்சி மிக்க தனிப்பாடலுடன் மீண்டும் ரசிகர்களை சந்தித்துள்ளார்...
முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர்களுடன் மெகா பட்ஜெட் படங்கள், அறிமுக இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் புதிய டிரெண்டை தொடர்ந்து உருவாக்கும் படங்கள் என அடுத்தடுத்து முத்திரை பதித்து வரும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 'கோட்', 'லவ் டுடே', 'டிராகன்' மெகா வெற்றிப் படங்களை தொடர்ந்து, 28வது படைப்பாக கல்பாத்தி எஸ்...
தேர்தலில் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில், பி...