Latest News :

தாடி பாலாஜி குடும்ப விவகாரம் - குறுக்கே புகுந்த சிம்பு!
Tuesday March-27 2018

காமெடி நடிகர் தாடி பாலாஜிக்கும், அவரது மனைவி நித்யாவுக்கும் இடையே கடந்த ஆண்டு பெரிய யுத்தமே நடந்துவிட்டது. வீட்டுக்குள் புகைந்துக்கொண்டிருந்த குடும்ப பிரச்சினை ஊராருக்கு தெரியும் அளவில் கொழுந்துவிட்டு எரிய, பாலாஜி நித்யா மீதும், நித்யா பாலாஜி மீது மாறி மாறி குற்றம் சாட்ட, ஒரு கட்டத்தில் காவல் துறையிடம் புகார் வரை இவர்களது பிரச்சினை சென்றுவிட்டது. பிறகு விவாகரத்து என்று நீதிமன்றத்திற்கு சென்ற பிறகு ஒரு வழியாக இவர்கள் குற்றம் சாட்டுவதை நிறுத்திவிட்டு அவர் அவர் வாழ்க்கையை பார்க்க தொடங்கியுள்ளனர்.

 

இந்த நிலையில், தாடி பாலாஜியின் குடும்ப வாழ்க்கையில் நடிகர் சிம்பு குறுக்கே புகுந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், சிம்புவின் எண்ட்ரி தாடி பாலாஜியையும், அவரது மனைவி நித்யாவையும் ஒன்றாக சேர்க்கத்தான் என்பது பெரும் ஆறுதலாக அமைந்திருக்கிறது.

 

ஆம், தாடி பாலாஇ - நித்யா விவகாரத்தில் தலையிட்டு இருக்கும் சிம்பு, நித்யாவுக்கு போன் செய்து போசியுள்ளார். ஆரம்பத்தில் யாரோ கலாய்க்கிறார்கள் என்று நித்யா நினைத்து போனை கட் செய்ய, பிறகு வீடியோ காலில் வந்த சிம்பு அவரிடம் ஒன்றரை மணி நேரம் பேசினாராம்.

 

நீங்க டிவியில உங்க குழந்தையோட வந்தத பார்த்ததில் இருந்து என்னால தாங்க முடியல, வீட்ல ஆயிரம் பிரச்சினை இருந்தாலும், உங்க குழந்தைக்காவது நீங்க ஒன்னா சேர்ந்து வாழனும், என்று கூறியவரிடம், தன்னை பற்றி வெளியில் மிக மோசமாக பாலாஜி கூறிவிட்டார், அதற்கு அவர் மன்னிப்பு கேட்பாரா? என்று நித்யா கேட்டிருக்கிறார்.

 

தான் பாலாஜியிடம் பேசுறேன், என்று பதில் அளித்த சிம்பு இந்த ஒரு முறை  எனக்காக பாலாஜியுடன் சேர்ந்து வாழு, இதன் அவர் பழையபடி பிரச்சினை செய்தால், உனக்கு சப்போர்ட்டாக நானே வருகிறேன், என்றும் கூறினாராம்.

 

சிம்புவின் இத்தகைய நல்ல மனதை புரிந்துக்கொண்ட நித்யா, உடனடியாக பாலாஜியுடன் சேர்ந்து வாழும் மனநிலையில் தான் இல்லை, என்பதையும் சிம்புவிடம் கூறியிருக்கிறார். அதே சமயம், இவ்வளவு பெரிய ஸ்டார் நம்ம வாழ்க்கை நல்லா இருக்கனும்னு இவ்வளவு மெனக்கெட்டும் அவரது பேச்சைக்கேட்டு நல்ல பதிலை அவருக்கு சொல்ல முடியலய என்ற வருத்தத்தோடும் அவர் இருக்கிறாராம்.

Related News

2280

ஹீரோ மற்றும் தயாரிப்பாளராக மீண்டும் களம் இறங்கும் ரமீஸ் ராஜா!
Friday September-12 2025

’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...

’படையாண்ட மாவீரா’ படத்தை வீழ்த்த பலர் மறைமுகமாக செயல்படுகிறார்கள் - இயக்குநர் வ.கெளதமன் வருத்தம்
Wednesday September-10 2025

வ. கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தில் வ...

’பாம்’ படம் மூலம் காமெடியில் கலக்க வரும் அர்ஜுன் தாஸ்!
Monday September-08 2025

’கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், தற்போது நாயகனாக பலதரப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்று வருகிறார்...

Recent Gallery