திரைப்படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளைக் காட்டிலும் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மக்களிடம் எளிதில் சென்றடைவதோடு, ஏராளமான ரசிகர்களையும் பெற்றுவிடுகிறார்கள்.
டிவி யை தவிர யூடியூப் உள்ளிட்ட சமூக வீடியோ தளங்கள் மூலமும் டிவி சீரியல்கள் பார்க்கப்படுவதால் இல்லதரசிகள் மட்டும் இன்றி இளசுகளிடமும் டிவி சீரியல் நடிகர் நடிகைகள் பிரபலமாகிவிடுகிறார்கள்.
அந்த வரிசையில், பாலிவுட் மக்களிடம் பிரபலமான டிவி சீரியல் நடிகராக வலம் வந்தவர் கரண். பல இந்தி சீரியல்களில் நடித்து வரும் கரண், மும்பையில் உள்ள தன் வீட்டு படுக்கையறையில் பிணமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பாலிவுட்டிலும், ரசிகர்களிடத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கரண் தூங்கிக்கொண்டிருந்த போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்க கூடும், அதனால் தான் அவர் உயிரிழந்திருக்க கூடும் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...
வ. கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தில் வ...
’கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், தற்போது நாயகனாக பலதரப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்று வருகிறார்...