‘மெர்சல்’ படத்தின் மூலம் இந்திய சினிமாவின் பார்வையை மட்டும் இன்றி, இந்திய அரசியல்வாதிகளின் பார்வையையும் தன் மீது வைத்த நடிகர் விஜய், சத்தமில்லாமல் அரசியல் பிரவேசத்திற்கான காய்களை நகர்த்தி வருகிறார்.
மாவட்டம் வாரியாக தனது மக்கள் இயக்கத்தில் புதிய உறுப்பினர்களையும், நிர்வாகிகளையும் சேர்க்கும் பணியை முடக்கிவிட்டவர், பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளை தனது மக்கள் இயக்கத்தின் தொண்டர்கள் மூலம் செய்து வருகிறார்.
இதற்கிடையே, அதிமுக எம்.எல்.ஏ ஒருவர் வரும் சட்டமன்ற தேர்தலில் விஜயின் ஆதரவு அதிமுக-வுக்கு வேண்டும் என்று கேட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், விஜய் பல ஆண்டுகளாக வசித்து வரும் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நீலாங்கரை வீட்டில் இருந்து வேறு வீட்டுக்கு குடியேறியுள்ளார். அதேபோல், தான் பயன்படுத்தி வந்த காரையும் திடீரென்று மாற்றிவிட்டாராம்.
தற்போது, நீலாங்கரையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் உள்ள வீட்டில் குடியேறியிருக்கும் விஜய், எப்போதும் படப்பிடிப்புக்கு சிப்ட் காரில் தான் வருவாராம். ஆனால், கடந்த சில நாட்களாக இன்னோவா காரில் வந்துக்கொண்டிருக்கிறாராம்.
வீடு, கார் என விஜயின் இந்த மாற்றத்திற்கு பின்னால் அரசியலுக்கான செண்டிமெண்ட் இருப்பதாக சிலர் கூறுகிறார்கள். அதாவது, சினிமாவில் உச்சத்துக்கு சென்ற விஜய் அரசியலில் எப்படி வருவார், என்று ஜாகதம் பார்த்து அதற்கு ஏற்றவாறு இந்த மாற்றங்களை செய்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...