விஜயின் ‘தமிழன்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான டி.இமான், ‘மைனா’ படத்தின் மூலம் தமிழக ரசிகர்களின் பேவரை இசையமைப்பாளரானதோடு, தொடர்ந்து ஹிட் பாடல்களை கொடுக்கும் குட் இசையமைப்பாளராக திகழ்ந்து வருகிறார்.
இதற்கிடையே, அமுல் பேபி போல கொழு கொழு என்று இருந்த இமான், தற்போது மெலிந்து சாக்லேட் பாயாக மாறியிருக்கிறார். இமானின் இந்த திடீர் உடல் குறைப்பின் ரகசியம் என்னவாக இருக்கும் என்று பலர் சிந்தித்துக் கொண்டிருக்க, அவரை ஹீரோவாக நடிக்க வைக்க பலர் முயற்சித்து வருகிறார்களாம்.
அதில் முக்கியமானவர் இயக்குநர் சுசீந்திரன். இன்று நடைபெற்ற ’நெஞ்சத்தில் துணிவிருந்தால்’ பட தலைப்பு வெளியீட்டு விழாவில் பேசிய சுசீந்திரன், இமான் சம்மததித்தால் எனது அடுத்த படத்தின் ஹீரோவாக அவரை அறிமுகப்படுத்த நான் தயாராக இருக்கிறேன், என்று கூறினார். இதை அவர் நகைச்சுவையாக சொன்னாலும், விரைவில் இமான் ஹீரோவாகப் போவது உறுதி தான் என்று அவரது நெருங்கிய வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது.
இசையமைப்பாளர்களில் ஹீரோவான இமான், நடிப்பில் ஹீரோவாக வெற்றி பெற வாழ்த்துகள்.
‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...
’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...
வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...