அரசியலில் இறங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த், விரைவில் தனது புதிய கட்சியின் பெயர் மற்றும் சின்னம் குறித்து அறிவிக்க உள்ளார். தற்போது தனத் கட்சிக்கு மாவட்டம் வாரியாக நிர்வாகிகளை நியமிக்கும் பணிகளில் அவர் தீவிரம் காட்டி வருகிறார்.
இதற்கிடையே, ரஜினிகாந்த் பா.ஜ.க-வின் பினாமி, அவரை இயக்குவது பா.ஜ.க தான், என்று பலர் கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில், ரஜினிகாந்த் தனது சட்டை பாக்கெட்டில் பா.ஜ.க சின்னத்தை வைத்துக்கொண்டு இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.
சமீபத்தில் இமயமலைக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்ட ரஜினிகாந்த், இமாச்சல பிரதேச பா.ஜ.க நிர்வாகிகளை சந்தித்து பேசினார். தற்போது அவர் தனது பாக்கெட்டில் பா.ஜ.க கொடியை வைத்துக்கொண்டு இமாச்சல பிரதேசத்தில் சுற்றியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேஸ்புக் போன்ற சமூக தளங்களில் வைரலாக பரவி வரும் இந்த புகைப்படம் ஒரிஜனலா அல்லது சித்தரிக்கபப்ட்டதா, என்பது தெரியவில்லை.
’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...
வ. கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தில் வ...
’கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், தற்போது நாயகனாக பலதரப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்று வருகிறார்...