பாலிவுட்டில் பிரபல நடிகையாக உள்ள ஷில்பா ஷெட்டி, யோகாவில் சிறப்பான தேர்ச்சி பெற்றவர். 42 வயதாகும் அவர் தற்போதும் இளமையாகவும், ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என்றார் அதற்கு காரணம் அவர் தினமும் செய்யும் யோகா தான்.
யோகா மீது பெரும் ஆர்வம் கொண்ட ஷில்பா ஷெட்டி, யோகா குறித்து சில புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார். தற்போது சினிமா பட வாய்ப்புகள் அவருக்கு இல்லை என்றாலும், அவ்வபோது தான் உடற்பயிற்சி மற்றும் யோகா செய்யும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுபவர், பொது நிகழ்ச்சிகளில் கவர்ச்சியான ஆடை அணிந்து கலந்துக்கொண்டு அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துவிடுகிறார். இப்படி தான் இருப்பதை சினிமா உலகுக்கு அவ்வபோது தெரியப்படுத்தி வரும் ஷில்பா ஷெட்டி, நிகழ்ச்சி ஒன்றில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் யோகா குறித்த புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ள ஷில்பா ஷெட்டி, அந்த நிகழ்ச்சியில் யோகா கலையை அனைவரது முன்பும் செய்து காட்டியதோடு, ”தினமும் யோகா செய்வதால் தான் நான் பிட்டாகவும், இளமையாகவும் இருக்கிறேன். என்னால் ஆடை இல்லாமல் சிறப்பாக யோகா செய்ய முடியும்.
ஆடையுடன் யோகா செய்தால் சில சமயம் யோகா செய்யும் போது கால் வழுக்கிவிட வாய்ப்புள்ளது. அதனால், ஆடை இல்லாமல் யோகா செய்தால் மிகவும் சுலபமாக இருப்பதோடு, எனக்கு வசதியாகவும் இருக்கிறது.” என்று பேசினார்.
ஆடை இல்லாமல் நிர்வாணமாக யோகா செய்வதா! என்று பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ள ஷில்பா ஷெட்டியின் இந்த பேச்சு பாலிவுட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...
வ. கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தில் வ...
’கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், தற்போது நாயகனாக பலதரப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்று வருகிறார்...