தற்போதைய தமிழ் சினிமாவில் போலீஸ் வேடம் என்றாலே அனைவரது நினைவிலும் வருவது கணேஷ் வெங்கட்ராம் தான். அவரும் எந்தவித தயக்கமும் இன்றி தொடர்ந்து போலீஸ் வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், நாம் சொல்ல வந்த விஷயம் வேறு.
டிவி தொகுப்பாளினியான நிஷாவை தான் கணேஷ் வெங்கட்ராம் திருமணம் செய்துக்கொண்டுள்ளார். காதலித்து திருமணம் செய்துக்கொண்ட இந்த ஜோடி தங்களது வெளிநாட்டு பயணத்தின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரபரபரப்பை ஏற்படுத்தினார்கள்.
இந்த நிலையில், பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நிஷா சீரியல் ஒன்றில் நடித்து வந்தார். தற்போது அந்த சீரியலில் இருந்து அவர் திடீரென்று விளகியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் நிஷா விலகல் குறித்து விவாதித்து வந்த நிலையில், தற்போதே அவரே அதற்கான விளக்கம் கொடுத்துள்ளார்.
ஆரம்பத்தில் நிஷாவின் கதாபாத்திரத்தை நல்ல விதமாக எழுதிய எழுத்தாளர்கள், போக போக அவரது வேடத்தை நெகட்டீவ் வேடமாக அமைத்துவிட்டார்களாம். சீரியலின் டி.ஆர்.பி ரேட்டிங்கை உயர்த்துவதற்காக திரைக்கதையையும், கதாபாத்திரங்களின் தன்மையையும் மாற்றுவது எழுத்தாளர்களின் பணி தான் என்றாலும், தன்னால் நெகட்டீவாக நடிக்க முடியாது என்பதால் சந்தோஷமாக சீரியலில் இருந்து விலகிவிட்டே, என்று நிஷா விளக்கம் அளித்துள்ளார்.
’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...
வ. கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தில் வ...
’கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், தற்போது நாயகனாக பலதரப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்று வருகிறார்...