தனது இசை மூலம் ஓட்டு மொத்தர் ரசிகர்களை மட்டும் இன்றி தமிழ்த் திரையுலகையும் திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இவருடன் இணைந்து பணியாற்றிய இயக்குநர்கள் அனைவரும், இவரது பணியையும், இவர் பின்னணி இசை அமைக்கும் விதம் மற்றும் பாடல்களை கொடுக்கும் விதத்தை வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களின் பட்டியலில் எளிதில் இடம்பிடித்திருக்கும் சாம் சி.எஸ், தற்போது மலையாள சினிமாவிலும் கால் பதிக்கிறார். மோகன்லால் நடிக்கும் ‘ஓடியன்’ படத்திற்கு பின்னணி இசை அமைப்பதன் மூலம் சாம் சி.எஸ் மலையாள சினிமாவில் அறிமுகமாகிறார்.
தனது மலையான சினிமா எண்ட்ரி குறித்து கூறிய சாம் சி.எஸ், “விக்ரம் வேதா ரிலிஸுக்கு பிறகு பாலிவுட் உட்பட பல படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்புகள் எனக்கு வந்தன. குறிப்பிட்ட வரையறைக்குள் நின்று விடாமல் ஒட்டு மொத்த படத்துக்கும் என்னால் இசையமைக்க முடியும் என தீவிரமாக நம்புபவன் நான். ஆனால், மோகன்லால் சாரின் ஓடியன் படத்திற்கு கேட்ட போது என்னால் தவிர்க்க முடியவில்லை. நான்லீனியர் கதை சொல்லலில் மிக சிறப்பாக அமைந்திருந்தது.
ஓடியன் ஒரு குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட பிரதேசத்தில் நடக்கும் ஒரு திரில்லர் கதை என்பதை கேள்விப்பட்ட உடனே கேரளாவின் பழங்கால புராதான இசைக்கருவிகளை உபயோகிக்கலாம் என்ற யோசனை தோன்றியது. வழக்கமாக மூங்கில் இசைக்கருவி என்றால் அது ஃப்ளூட் தான். ஆனால் 6 அடி நீளம் மூங்கில் இசைக்கருவி ஒன்று அழகான வசியத்துக்காக பயன்படுகிறது. அதை இசைக்க தெரிந்த வயதான பெண் ஒருவரை வைத்து இசைத்து, படத்துக்கு பயன்படுத்திக் கொண்டோம்.” என்று தெரிவித்த சாம் சி.எஸ், படத்தை முழுமையாக காட்சிப்படுத்தி முடிப்பதற்கு முன்பே சில காட்சிகளுக்கு இசையமைத்து, ஒட்டு மொத்த ஓடியன் படக்குழுவையும் கவர்ந்து விட்டாரம்.
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...