Latest News :

அண்ணன் தம்பி படமாக உருவாகும் ‘ராஜா மந்திரி’
Thursday March-24 2016

சென்னை,மார்ச் 24 : ’சின்ன தம்பி பெரிய தம்பி’ படத்திற்குப் பிறகு தமிழ் சினிமாவில் காமெடி கலந்த அண்ணன் தம்பி படங்கள் வரவு குறைந்துவிட்டது. தற்போது அந்த குறையை நிவர்த்தி செய்யும் வகையில் உருவாகும் படம் தான் ‘ராஜா மந்திரி’. மெட்ராஸ் கலையரசனும், காளி வெங்கட்டும் இணைந்து நடிக்கும் இப்படத்தை உஷா கிருஷ்ணன் இயக்குகிறார். இவர் சுசீந்திரனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

அண்ணன் தம்பி உறவு ஒரு பக்கமும், அவர்களுக்கு உண்டாகும் காதலும், மனதைத் தொடும் சென்டிமெண்ட் அனுபவங்களுமே கதை. படம் பார்க்கும் அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்கக்கூடிய ஒரு முழு பொழுதுபோக்கு அம்சமுள்ள படமாக அமைந்திருப்பதை, அதன் விளம்பர காட்சிகளைப் பார்த்தாலே புரியும்.  காதலும்,  அதன் கலாட்டாக்களும் கலந்து இருந்தாலும், அண்ணன் தம்பி உறவுக்குள் இருக்கும் அற்புதமான உணர்வுகளுக்கும், சென்டிமெண்ட்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

’எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட்’ என்ற பேனரில் வி.மதியழகன் மற்றும் ஆர். ரம்யா ஆகிய இருவரும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இவர்களோடு கண்களைக் கொள்ளை கொள்ளும் அழகியலான ஒளிப்பதிவுக்குப் பெயர் பெற்ற பிஜி முத்தையா தனது பிஜி மீடியா வொர்க்ஸ் நிறுவனம் மூலம் இணைத் தயாரிப்பாளராக களமிறங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இப்படத்தின் சிங்கில் டிராக் ஒன்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. தனது கனவு தேவதையை நினைத்து, உற்சாகமாகி காளி வெங்கட் பாடும் பாடலாக ‘எதிர்த்த வீட்டு காலிஃப்ளவரே’ பாடம் அமைந்திருக்கிறது. ஜஸ்டின் பிரபாகரின் அருமையான  இசையில், ஏ.சி.எஸ். ரவிசந்திரன் இப்பாடலைப் பாடியிருக்கிறார்.

Related News

23

’வீர தமிழச்சி’ பெண்களுக்கான ஒரு விழிப்புணர்வு படம் - இயக்குநர் சுரேஷ் பாரதி
Thursday October-02 2025

அறிமுக இயக்குநர் சுரேஷ் பாரதி இயக்கத்தில் உருவாகி வரும் ‘வீர தமிழச்சி’ திரைப்படத்தில் சஞ்சீவ் வெங்கட், இளயா, சுஷ்மிதா சுரேஷ், ஸ்வேதா டோரத்தி, மறைந்த நடிகர் மாரிமுத்து, எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி, கே...

Mahesh Babu Stars in Denver’s New Brand Film Showcasing the Autograph MB Collection
Tuesday September-30 2025

Denver, India’s prestigious men’s fragrance brand, in collaboration with superstar Mahesh Babu, has launched a brand film to promote the Autograph MB Collection, a luxury Eau de Parfums range —that captures Mahesh Babu’s unique style and spirit, embodying the sophistication of one of the most revered stars...

கவனம் ஈர்க்கும் பிரபாஸின் ‘தி ராஜா சாப்’ டிரைலர்!
Tuesday September-30 2025

பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள பான் இந்தியா திரைப்படமான ‘தி ராஜா சாப்’ டிரைலர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது...

Recent Gallery