50 க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ள எஸ்.ஏ.சந்திரசேகர், தற்போது நடிக்க தொடங்கிவிட்டார். தனுஷின் ‘கொடி’ உள்ளிட்ட சில படங்களில் நடித்து வரும் அவர், தற்போது சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியின் வாழ்க்கையை மையமாக உருவாகும் படத்தில், டிராபிக் ராமசாமி வேடத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநர் விஜய் விக்ரம் இயக்குகிறார்.
நேற்று சுதந்திரத் தினத்தை முன்னிட்டு, எஸ்.ஏ.சந்திரசேகரனை டிராபிக் ராமசாமி அவரது இல்லத்தில் சந்தித்தார். பொன்னாடை அணிவித்து சந்திரசேகருக்கு மரியாதை செலுத்திய டிராபிக் ராமசாமி, தன் வாழ்க்கை கதையான டிராபிக் ராமசாமி படத்தைப் பற்றியும் கேட்டு தெரிந்துக் கொண்டதோடு, சிறிது நேரம் படம் குறித்து ஆலோசனையும் நடத்தினார். இந்த சந்திப்பின் போது படத்தின் இயக்குநர் விஜய் விக்ரம் உடன் இருந்தார்.
’கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், தற்போது நாயகனாக பலதரப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்று வருகிறார்...
சன்லைட் மீடியா எழுமலை ஏ.எஸ்...
லவ் பிலிம்ஸ் வழங்கும் லவ் ரஞ்சன் மற்றும் அங்கூர் கார்க் தயாரிப்பில் பிரபல இயக்குநர் ஜி...