100 க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோவாக நடித்திருக்கும் சத்யராஜ், தற்போது நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். ‘பாகுபலி’ படத்தில் இவர் நடித்த கட்டப்பா கதாபாத்திரம் உலக அளவில் பிரபலமடைந்துள்ளது. அதற்கு சான்றாகதான் லண்டனில் உள்ள மேடம் துஸாட்ஸ் மியூசியத்தில் கட்டப்பாவின் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. தமிழ் நடிகர் ஒருவருக்கு இத்தகைய பெருமை கிடைத்திருப்பது இது தான் முதல் முறை. இதன் காரணமாக சத்யராஜின் குடும்பம் சந்தோஷத்தில் இருந்த நிலையில், தவறான செய்தி ஒன்றால் தற்போது அக்குடும்பம் சோகத்தில் மூழ்கியிருக்கிறது.
நடிகர் சத்யராஜின் மகளான திவ்யா சத்யராஜ், சென்னையில் பிரபலமான நியூட்ரிஷன் டையடிக்ஸ் வல்லுநராக திகழ்ந்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட, வெளிநாட்டு நிறுவனம் ஒன்று, தங்களது தரமற்ற பொறுளை தரமான பொறுள் என்று கூறி சான்றிதழ் வழங்குமாறு திவ்யாவை மிரட்டியதாக கூறப்பட்டது. இது குறித்து பத்திரிகைகளுக்கு தகவல் தெரிவித்த திவ்யா, அந்நிறுவனம் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், இன்று பத்திரிகை ஒன்றில் திவ்யா சத்யராஜ் திரைப்படத்தில் நடிக்கப் போவதாக செய்தி வெளியாகியுள்ளது. அவர் நடிக்க இருக்கும் படத்தை வடிவேலு என்பவர் இயக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இதை திட்டவட்டமாக மறுத்திருக்கும் திவ்யா சத்யராஜ், “இன்று பத்திரிகை ஒன்றில் நான் நடிக்கப் போவதாக வெளியான செய்தியை கண்டு அதிர்ச்சியடைந்தேன். திரைத்துறை மீது எனக்கு அபரிதமான மரியாதை உண்டு. நான் நியூட்ரிஷன் டையடிக்ஸ் துறையில் கவனம் செலுத்தி, காலை முதல் மாலை வரை பிஸியாக இருக்கிறேன். நான் நடிக்க போவதாக கூறப்படும் படத்தின் இயக்குநர் வடிவேல் எங்கள் குடும்பத்து நண்பர். தவிர அவர் அப்பாவை வைத்து ஒரு படம் இயக்க உள்ளார். நான் அந்த படத்தை தயாரிக்கவும் இல்லை, அதில் நடிக்கவும் இல்லை.” என்று தெரிவித்திருக்கிறார்.
இந்த தவறான செய்தியால் திவ்யா சத்யராஜ் மட்டும் இன்றி அவரது குடும்பமே அப்செட்டாகியுள்ளதாம்.
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...