Latest News :

தொடரும் சினிமா வேலை நிறுத்தம் - முதல்வரிடம் முறையிட விஷால் முடிவு!
Saturday March-31 2018

கடந்த ஒரு மாதமாக வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்களுடன் சமீபத்தில் நடத்திய பேச்சு வார்த்தையில் எந்த ஒரு முடிவும் எட்டப்படாததால், வேலை நிறுத்தம் தொடரும் என்று நேற்று அறிவித்துள்ளது.

 

அதே சமயம், இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு சரி செய்ய வேண்டும், திரையரங்கங்களின் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டையை நோக்கி பேரணியாக சென்று, தமிழக முதல்வரிடம் மனு கொடுக்கவும் முடிவு செய்துள்ளனர்.

 

இது தொடர்பாக நேற்று பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளார்கள் சங்க தலைவர் விஷால், நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி, சிகா தலைவர் பி.சி.ஸ்ரீராம் உள்ளிட்ட பல சினிமா சங்கங்களின் நிர்வாகிகள் கலந்துக்கொண்டார்கள்.

 

இதில் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் பேசுகையில், “பொது மக்கள் திரையரங்கிற்கு வந்து படம் பார்க்கும் போது எந்தவித பாரமும் இல்லாமல் படம் பார்க்க வேண்டும். விவசாயிகளும், தயாரிப்பாளர்களும் ஒன்று என்ற நிலையில் தான் இப்போது இருக்கிறோம். தயாரிப்பாளர் சங்கத்தை பொறுத்தவரை புது படங்கள் ரிலீஸ் ஆகாது, தமிழகத்தில் உள்ள அனைத்து திரை அரங்கிலும் கம்யூட்டர் டிக்கெட் வழங்க வலியுறுத்தி உள்ளோம். எங்களது கோரிக்கையை அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் ஒரு மனுவாக கொடுக்க உள்ளோம். தமிழக அரசு தலையிட்டு பிரச்சினையை தீர்க்க வேண்டும். முதல்வர், செய்தித்துறை அமைச்சர் தலையிட்டு பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்.

 

அடுத்த வாரம் புதன்கிழமை பேரணியாக சென்று மனு கொடுக்க உள்ளோம். வேலை நிறுத்தம் என்றால் அடிமட்ட ஊழியர்களுக்கு கஷ்ட்டமான ஒன்றாக தான் இருக்கும். ஆனால் அதற்கான தகுந்த தீர்வு விரைவில் கிடைக்கும்.” என்றார்.

Related News

2305

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

மே 15 ஆம் தேதி வெளியாகும் ‘எக்ஸாம்’ (Exam) தொடர்!
Monday April-27 2026

வால்வாட்சர்  ஃபிலிம்ஸ் (Wallwatcher Films) நிறுவனத்தின் சார்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் A...

Recent Gallery