2.0 மற்றும் காலா என்று ரஜினியின் இரண்டு படங்கள் விரைவில் வெளியாக உள்ளதால், அவரது ரசிகர்கள் பெரும் சந்தோஷத்தில் இருந்த நிலையில், சினிமா ஸ்டிரைக் அவர்களது சந்தோஷத்தை சோகமாக மாற்றியுள்ளது.
காலா ஏப்ரல் 27 ஆம் தேதி ரிலீஸ் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தி வரும் வேலை நிறுத்தப் போராட்டத்தினால் கடந்த ஒரு மாதமாக எந்த புதிய திரைப்படங்களும் வெளியாகவில்லை. இந்த வேலை நிறுத்தம் இந்த மாதம் முடிந்துவிடும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு போராட்டம் தொடரும் என்று விஷால் அறிவித்து அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளார். இருந்தாலும், ஏப்ரல் 27 ஆம் தேதிக்குள் வேலை நிறுத்தத்தை முடித்துவிடுவார்கள் என்று கூறப்படுவதால், காலா நிச்சயம் ரிலிஸாகிவிடும் என்ற நம்பிக்கையும் ரஜினி ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், என்று ரஜின்காந்த் கூறியதற்கு கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. மேலும், ரஜினியின் காலா படத்தையும் ரிலீஸ் செய்ய விட மாட்டோம், என்று கூறியுள்ள அந்த அமைப்புகள் கர்நாடகாவின் பல இடங்களில் ரஜினிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
சினிமா போராட்டம் முடிவுக்கு வந்தாலும், கன்னடர்களின் போராட்டத்தினால் பெங்களூர் உள்ளிட்ட கர்நாடக பகுதிகளில் ‘காலா’ ரிலிஸாகத நிலை ஏற்பட்டுள்ளதால். ரஜினி உள்ளிட்ட காலா குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...