Latest News :

பாலிவுட் பாடகரை டோலிவுட்டில் அறிமுகப்படுத்திய தேவி ஸ்ரீபிரசாத்!
Tuesday April-03 2018

பாலிவுட்டில் பிரபலமாக உள்ள பாடகர்களான மில்கா சிங், அப்பச்சே இந்தியன், அட்னன் ஷமி, பாபா செகல் உள்ளிட்ட பலரை தென்னிந்திய சினிமாவில் அறிமுகப்படுத்திய பெருமை இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்தையே சேரும். அந்த வரிசையில் தற்போது மேலும் ஒரு பாலிவுட் பாடகரை டோலிவுட்டுக்கு தேவி ஸ்ரீபிரசாத் அழைத்து வந்திருக்கிறார்.

 

பாலிவுட்டில் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர், பாடகர், இசையமைப்பாளர் என பன்முகத்திற்மைக் கொண்ட பர்ஹான் அக்தரை முதல் முறையாக் தென்னிந்திய மொழியில் தயாரான ‘பரத் அனே நேனு’ என்ற படத்தில் பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

 

பர்ஹான் அக்தரை தெலுங்குப் பாடல் பாடா வைத்தது குறித்து தேவி ஸ்ரீபிரசாத் கூறுகையில், “பர்ஹான் அக்தரை மூன்று ஆண்டுகளுக்கு முன் ஒரு விருது வழங்கும் விழாவில் சந்தித்தேன். அப்போது அவர் என்னுடைய இசையில் வெளியான ஹிந்தி பாடல்களைப் பற்றி பேசினார். அதே போல் நானும் ‘ராக் ஆன் ’ என்ற படத்தில் அவர் பாடிய பாடல் என்னை மிகவும் கவர்ந்த பாடல் என்றும், உங்களது குரல் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று சொன்னேன். அத்துடன் நீங்கள் ஏன் தென்னிந்திய மொழிகளில் பாடக்கூடாது? என்று கேட்டேன்.  அதற்கு அவர் எனக்கு விருப்பம் இருந்தாலும் எனக்கு தென்னிந்திய மொழிகளான தெலுங்கோ, தமிழோ சுத்தமாக தெரியாதே..? என்று பதிலளித்தார். அத்துடன் உங்களுக்கு என்னுடைய குரலினிமை மீது நம்பிக்கை இருந்தால் நான் முயற்சி செய்கிறேன். நன்றாக இருந்தால் வைத்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் நீக்கி விடுங்கள் என்றார். அப்போது நான் அவருக்கு மொழி உச்சரிப்பு ஆகியவற்றை, நான் பார்த்துக் கொள்கிறேன். உங்களுடைய குரலுக்கு ஏற்ற வகையில் பாடல்கள் அமைந்தால் நீங்கள் தான் பாடவேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அதற்கு சரியென்று ஒப்புக்கொண்டார்.

 

முதலில் சுகுமார் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் தயாரான ‘1 நேநோக்கடுனே’ ( 1 Nenokkadine) என்ற படத்தில் இடம்பெற்ற ‘Who are you..’ என்ற பாடலைத்தான் ஃபர்ஹான் அக்தர் பாடுவதாகயிருந்தது. ஆனால் போதிய கால அவகாசம் இல்லாததால் அவரால் பாட இயலவில்லை. அதனையடுத்து தற்போது மகேஷ் பாபு நடிப்பில் ‘பாரத் அனே நேனு ’ என்ற படத்தில் இடம்பெற்ற ‘I Dont Know...’ எனத் தொடங்கும் பாடலை ஃபர்ஹான் பாடினால் நன்றாக இருக்கும் என்று எண்ணி, அவரைத் தொடர்பு கொண்டேன். இந்த பாடலுக்கான மெட்டை நான் உருவாக்கும் போதே இந்த பாடலை ஃபர்ஹான் பாடினால் நன்றாக இருக்கும் என்று உறுதியாக நம்பினேன். அவரைத் தொடர்பு கொண்ட போது, மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டு பாடுகிறேன் என்றார். இருந்தாலும் அவர் தெலுங்கு மொழி உச்சரிப்பைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டேயிருந்தார். ஆனால் மும்பையில் இந்த பாடலை பதிவு செய்யும் போது அற்புதமாக பாடிக் கொடுத்தார். 

 

இந்த பாடலை கேட்டவர்கள் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி. ஃபர்ஹான் அக்தர் எப்படி தெலுங்கு மொழியை கச்சிதமாக உச்சரித்து இனிமையாக பாடியிருக்கிறார் என்று ஆச்சரியப்பட்டனர். இதுவே இந்த பாடலுக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்திருக்கிறது. கடந்த வாரம் இந்த பாடல் இணையத்தில் வெளியானது.  வெளியான சில மணி நேரங்களிலேயே மில்லியன் கணக்கில் வரவேற்பையும் பெற்றிருக்கிறது. இந்த பாடலின் வெற்றிக்கு உதவிய நாயகன் மகேஷ் பாபு, இயக்குநர் கொரட்லா சிவா, தயாரிப்பாளர் என அனைத்து தரப்பினருக்கும் நான் நன்றித் தெரிவித்துக் கொள்கிறேன். ஃபர்ஹான் அக்தருடனான இந்த இசைப்பயணம் மேலும் தொடரும்.” என்றார்.

Related News

2315

’கே.டி. - தி டெவில்’ அனைவருக்கும் பிடித்த மாஸ் ஆக்‌ஷன் படமாக இருக்கும் - துருவ் சர்ஜா நம்பிக்கை
Saturday July-12 2025

கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான  KVN Productions வெங்கட் கே...

நடிகைகளை உருட்டும் இயக்குநர் நான் அல்ல! - ’உருட்டு உருட்டு’ பட விழாவில் விக்ரமன் பேச்சு
Saturday July-12 2025

ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ்  என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு  ஜெய்சங்கர் தயாரிப்பில்,   பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில்,  சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...

”’பீனிக்ஸ்’ நாயகன் சூர்யாவுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது” - இயக்குநர் அனல் அரசு புகழாரம்
Saturday July-12 2025

இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...

Recent Gallery