சமீபத்தில் வெளியான ’கோலி சோடா 2’ படத்தின் ”பொண்டாட்டி...” பாடல் ப்ளே லிஸ்டில் திரும்ப திரும்ப கேட்கும் பாடலாக அமைந்திருப்பதோடு, குறுகிய காலத்திலேயே தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது.
இது குறித்து இயக்குநர் விஜய் மில்டன் கூறுகையில், “ஜாலியான, துள்ளலான ரசிக்ககூடிய பாடலாக உருவாக்குவது தான் எங்கள் ஐடியா. எங்கள் எதிர்பார்ப்பு இப்போது நிறைவேறி இருக்கிறது. இசையமைப்பாளர் அச்சு பாடலின் தேவையை எளிதாக உணர்ந்து கொண்டு, இசையமைப்பாளராகவும், பாடகராகவும் சிறந்த பாடலை வழங்ககூடியவர். மணி அமுதவன் எளிதான, அனைவரையும் சென்றடையக்கூடிய பாடல் வரிகளை வழக்கம் போலவே வழங்கியுள்ளார்.
இந்த காலகட்டத்தில் லிரிக் வீடியோ எனப்படும் பாடல் வரிகளை கொண்டு வெளியாகும் வீடியோக்களே படத்தை கொண்டு சேர்க்க பயன்படும் ஒரு கருவியாக பயன்படுகின்றன. பாடலை அலங்கரித்து எல்லா வகையிலும் கொண்டு சேர்த்த திங்க் மியூசிக் நிறுவனத்துக்கு நன்றி.” என்றார்.
சமுத்திரகனி, செம்பன் ஜோஸ், பரத் சீனி, வினோத், எசக்கி பரத், சுபிக்ஷா, க்ரிஷா, ரக்ஷிதா, ரோகிணி, ரேகா, சரவண சுப்பையா, ஸ்டன் சிவா உட்பட ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் இப்படத்தில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் ஒரு முக்கிய சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...