ஹப்பாஸ் மூவி லைன் என்ற பட நிறுவனம் ’தேவகோட்டை காதல்’ என்ற படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் சீனு என்ற புதுமுகம் கதானாயகனாக நடிக்கிறார். நாயகியாக சுவிதா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார்.
மற்றும் கஞ்சா கருப்பு பாவாலட்சுமணன் தீப்பெட்டி கணேசன் கிளி ராமச்சந்திரன் மெடிமிக்ஸ் ஏ.வி.அனு சதாந்தன் மனோஜ் சலாம் ஸ்ருதி ரஜினி முரளி வத்சலா டீச்சர் சுஜித்திரா ஆகியோர் நடிக்கிறார்கள்
கதை - சீனு, திரைக்கதை - ஏ.ஆர்.கே, பி.பி.ஏ.ரஹ்மான், பாடல்கள் - காதல்மதி, இசை- ஜோனபக்தகுமார், எடிட்டிங் - இப்ரு, ஸ்டண்ட் - ஜீரோஸ், நடனம் - ராஜேஷ், ஒளிப்பதிவு - ரஞ்சித் ரவி, இணை தயாரிப்பு - பீனா காசிம், வத்சலா டீச்சர் சபீனா.கே, எழுதி இயக்குகிறார் ஏ.ஆர்.கே இவர் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் உதவியாளராக பணியாற்றியவர்.
படம் பற்றி இயக்குநர் கூறுகையில், “படித்த பணக்கார அழகான பெண்ணுக்கும் படிக்காத அழகில்லாத ஏழை பையனுக்கும் ஏற்படும் காதல், அதனால் ஏற்படும் பிரச்சனைகளும் கலவரங்களும் தான் கதை முடிச்சு.
படப்பிடிப்பு மதுரை ஆலப்புழை மற்றும் பாலக்காடு அருகில் எம்.ஜி.ஆருக்கு உறவினர் வீடு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் நடை பெற்றிருக்கிறது.” என்றார்.
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...
வால்வாட்சர் ஃபிலிம்ஸ் (Wallwatcher Films) நிறுவனத்தின் சார்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் A...