பிரபல இயக்குநர் மகாராஜனின் மகன் விஸ்வநாத் மகாராஜன் தனது தந்தை இயக்கும் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாக உள்ளார்.
விஜயகாந்த் நடித்த ‘வல்லரசு’, அர்ஜூன் நடித்த ‘அரசாட்சி’, அஜீத் நடித்த ‘ஆஞ்சனேயா’ மற்றும் இந்தியில் சன்னி டியோல், ராஜ் பாப்பர் நடித்த ‘இந்தியன்’ போன்ற மாபெரும் வெற்றி படங்களை இயக்கியுள்ள மகாராஜன், ‘ஜோர்’, ‘சாம்பியன்’, ‘சாம்பியன்’ போன்ற சூப்பர் ஹிட் இந்தி படங்களுக்கு கதையும் எழுதியிருக்கிறார்.
இந்திய அளவில் வரவேற்பு பெற்ற கலைஞராக கருதப்படும் மகாராஜன், தற்போது சன்னி டியோல் நடிக்க உள்ள ‘இந்தியன் 2’ படத்தை இயக்க உள்ளார்.
இதற்கிடையே, தனது மகன் விஸ்வநாத் மகாராஜனை நடிகராக அறிமுகப்படுத்த உள்ள மகாராஜன், தனது மகன் நடிக்கும் படத்தை கமர்சியல் படமாக உருவாக்க உள்ளார்.
விஷுவல் கம்யூனிகேசன் படித்ததுடன். சினிமாவுக்கு தேவையான டான்ஸ், பைட் என முழுமையாக கற்றுத் தேர்ந்துள்ள மகனை வைத்து விரைவில் படப்பிடிப்பை ஆரம்பிக்க உள்ளார் மகாராஜன். இப்படத்தில் முன்னணி நடிகை ஒருவர் நாயகியாக நடிக்க இருப்பதோடு, பிரபல நடிகர் நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர்.
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...