ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும் பல்வேறு இடங்களில் தமிழர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தி வரும் வேலை நிறுத்தத்தில் தமிழக அரசு தலையிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழக முதல்வரிடம் மனு கொடுக்கப் போவதாக தமிழ் சினிமா சங்கங்களின் நிர்வாகிகள் கூட்டாக அறிவித்தனர். மேலும், பேரணியாக சென்று முதல்வரிடம் மனு வழங்க இருப்பதாகவும் கூறியிருந்தார்கள்.
இந்த நிலையில், திடீரென்று காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடகோரியும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கர், இயக்குநர்கள் சங்கம், நடிகர்கள் சங்கம், தொழிலாளர் சம்மேளனம், விநியோகஸ்தர்கள் சங்கம் ஆகியவை கூட்டாக கண்டன போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளன.
வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற உள்ள இந்த மாபெரும் கண்டன அறவழி போராட்டத்தில், நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் என தமிழ் சினிமாவை சேர்ந்த அத்தனை கலைஞர்களும் பங்கேற்க வேண்டும், என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...