விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கரு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ள சாய் பல்லவிக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிகின்றதாம். செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ’என்.ஜி.கே’ படத்திலும் ஹீரோயினாக நடித்து வரும் சாய் பால்லவி, வலிய வரும் வாய்ப்புகளை தட்டி விடுவது போல நடந்துக்கொள்வதோடு, ஹீரோக்களிடம் தப்பான பெயரும் எடுத்து வருகிறார்.
இந்த நிலையில், எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் புதிய படத்தில் சாய் பல்லவியை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்ய படக்குழு முடிவு செய்திருந்த நிலையில், தற்போது அந்த வாய்ப்பு நயந்தாராவுக்கு சென்றுவிட்டதாம்.
சாய் பல்லவி தான் சிவகார்த்திகேயனின் ஜோடி, என்று முடிவு செய்யப்பட்ட பிறகு திடீரென்று அவரை படத்தில் இருந்து நீக்கிய படக்குழு நயந்தாராவை கமிட் செய்ததற்கு காரணம், சாய் பல்லவியின் அடாவடித்தனம் தான் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே சிவகார்த்திகேயனுடன் ‘வேலைக்காரன்’ படத்தில் நடித்திருக்கும் நயந்தாரா, இயக்குநர் ராஜேஷ் இயக்கத்திலும் நடித்திருப்பதால், இவர்களது கூட்டணி படத்தில் நடிக்க உடனே சம்மதம் சொல்லிவிட்டாராம்.
சாய் பல்லவி, ஆரம்பமே அதிரடியாக அமைந்த நிலையில், அவர் நயந்தாராவிடம் தோற்றுப் போயிறுப்பதைப் பற்றி தான் தமிழ் சினிமாவே பேசிக்கொண்டிருக்கிறதாம்.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...