காவேரி வாரியம் அமைக்க கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதே சமயம், விரைவில் தொடங்க உள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை தமிழக மக்கள் நிராகரிக்க வேண்டும் என்றும் சில பிரபலங்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில், நடிகரும் இயக்குநருமான பிரபு தேவா ஐபிஎல் போட்டியின் தொடக்க விழாவில் நடன நிகழ்ச்சி நடத்த இருக்கிறாராம்.
‘மெர்க்குரி’, ‘சார்லி சாப்ளின் 2’, ’லட்சுமி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வரும் பிரபு தேவா, சல்மான் கானை வைத்து படம் ஒன்றை இயக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளார். இப்படி பிஸியாக இருந்தாலும், ஐபிஎல் குழு கேட்டுக்கொண்டதால், ஐபிஎல் தொடக்க விழாவில் நடன நிகழ்ச்சி நடத்த ஒப்புக்கொண்டாராம்.
நாளை (ஏப்.6) நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடக்க விழாவில், 1 மணி நேரம் நடன நிகழ்ச்சி நடத்த முடிவு செய்துள்ள பிரபு தேவா, இதில் ஹிருத்திக் ரோஷன், வருன் தவான், தமன்னா உள்ளிட்ட பல இந்தி நடிகர்களையும் பங்கேற்க செய்துள்ளாராம்.
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...
வால்வாட்சர் ஃபிலிம்ஸ் (Wallwatcher Films) நிறுவனத்தின் சார்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் A...