தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உருவெடுத்துள்ள சிவகார்த்திகேயன், தற்போது நடித்து வரும் படங்கள் அனைத்தும் மிகப்பெரிய பொருட்ச் செலவில் உருவாகும் பிரம்மாண்ட படங்களாக உள்ளது. செலவுக்கு ஏற்றவாறு சிறந்த ஓபனிங் இருப்பதால், சிவகார்த்திகேயனை நம்பி தயாரிப்பாளர்கள் முதலீடு செய்யவும் தயாராக இருக்கிறார்கள்.
ஹீரோவாவதற்கு முன்பு டிவி சேனல் ஒன்றில் சிவகார்த்திகேயன் தொகுப்பாளராக இருந்தது அனைவரும் அறிந்தது தான். ஆனால், அறியாத ஒன்று அவர் திரைப்பட உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். ஆம், தற்போது நயந்தாராவை வைத்து ‘கோலமாவு கோகிலா’ படத்தை இயக்கி வரும் நெல்சன் சிம்புவை வைத்து இயக்கிய ‘வேட்டை மன்னன்’ படத்தில் சிவகார்த்திகேயன் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளாராம்.
மேலும், அப்படத்தில் சிம்பு, ஜெய் ஆகியோர் நடித்த அப்படத்தில் சிவகார்த்திகேயனும் சிறு வேடம் ஒன்றில் நடித்திருக்கிறாராம். சினிமாவில் நடிகராக சிவகார்த்திகேயன் அறிமுகமானது அப்படத்தில் தானாம். ஆனால், அப்படம் டிராப்பாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...
வ. கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தில் வ...
’கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், தற்போது நாயகனாக பலதரப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்று வருகிறார்...