Latest News :

பிரபாசின் ஜோடியான பாலிவுட் நடிகை ஸ்ரத்தா கபூர்!
Wednesday August-16 2017

‘பாகுபலி’ யின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் ’சாஹூ’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்த நிலையில், இப்படத்தின் ஹீரோயினாக பிரபல பாலிவுட் நடிகை ஸ்ரத்தா கபூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

 

கதாநாயகி தேர்வு சம்பந்தமாக பல்வேறு ஊகங்கள் உலவி வந்த நிலையில், அதன் தயாரிப்பாளர்கள் வம்சி மற்றும் பிரமோத், இப்படத்தின் கதாநாயகியை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். 

 

ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் அதிரடி ஆக்‌ஷன் படமான இப்படத்திற்காக ஐதராபாத் ராமோஜி திரைப்பட நகரில் மிக்கப்பெரிய செட்டுகள் போடப்பட்டுள்ளது.

 

இது குறித்து கூறிய தயாரிப்பாளர்கள், “ஸ்ரத்தா கபூர் கதைக்கு மிகவும் பொருத்தமான தேர்வு. அவரை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி. இது பிரபாஸ் நடிக்கும் முதல் ஹிந்திப் படம் என்பதால் மிகவும் சிறப்பும் முக்கியத்துவமும் வாய்ந்தது. பரபரப்பான-விறுவிறுப்பான சண்டைக் காட்சிகளுக்கு குறைவிருக்காது.” என்றனர்.

 

சாஹூ குடும்பத்தில் ஸ்ரத்தா கபூரை பரவசத்துடன் வரவேற்கும் தயாரிப்பாளர்கள்,  பிரபாஸ்-ஸ்ரத்தா ஜோடி வெள்ளித்திரையில் ஏற்படுத்தவிருக்கும் சுவராஸ்யத்தை வெகுவாக எதிர்நோக்கி காத்திருப்பதாகக் கூறுகின்றனர்.

 

மதி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் கலை பணியை சாபு சிரில் மேற்கொள்ள, ஸ்ரீகர்பிரசாத் எடிட்டிங் செய்கிறார். சங்கர்-எஹ்ஸான்-லாய் இசையமைக்க, அமிதாப் பட்டாச்சார்யா பாடல்கள் எழுதுகிறார். 

 

நீல்நிதின் முகேஷ் வில்லனாக நடிக்கும் இப்படத்தை யு.வி கிரியேஷன்ஸ் சார்பாக வம்சி, பிரமோத் ஆகியோர் இணைந்து தயாரிக்க, சுஜீத் இயக்குகிறார். 

 

 

பரபரப்பான படப்பிடிப்பில் இருக்கும் இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வர இருக்கிறது.

Related News

234

'TN 2026' படம் யாரையும் புண்படுத்தாது! - தம்பி ராமையா விளக்கம்
Saturday April-04 2026

‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...

எங்கள் படம் பிரிந்தவர்களை சேர்த்து வைக்கும்! - ’பிரேக் ஃபாஸ்ட்’ (Break Fast) படக்குழு நம்பிக்கை
Saturday April-04 2026

’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...

’மனிதன் தெய்வமாகலாம்’ படத்தின் இயக்குநரை பாராட்டிய செல்வராகவன்!
Friday April-03 2026

வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...

Recent Gallery