Latest News :

விஜயின் 64 வது படத்திற்கு இயக்குநர் ரெடி!
Saturday April-07 2018

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 62 வது படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. இதனால் இப்படத்தை ‘விஜய் 62’ என்று அழைக்கின்றனர். இதற்கிடையே, விஜயின் அடுத்தப் படத்தை இயக்கப் போவது யார்? என்ற கேள்வி அனைவரிடமும் தொற்றிக்கொண்டுள்ளது.

 

விஜயின் அடுத்தப் படத்தை இயக்கப் போகும் இயக்குநராக வெற்றிமாறனின் பெயர் தற்போது அடிபடுகிறது. அதே சமயம், விஜயின் 64 வது படத்தை ஹரி இயக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

தற்போது, விக்ரமை வைத்து ‘சாமி 2’ படத்தை இயக்கி வரும் ஹரி, அடுத்ததாக சூர்யாவை வைத்து ஒரு படம் இயக்க உள்ளார். இப்படத்திற்குப் பிறகு விஜயை வைத்து ஒரு படம் இயக்கப் போவதாக அவரே சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

 

Director Hari

 

ஆக்‌ஷன் மசாலா படங்கள் எடுப்பதில் வல்லவரான ஹரி, தனது படங்களின் காட்சிகளை எக்ஸ்பிரஸ் ரயிலை விட வேகமாக நகர்த்திச் செல்பவர், அவரது இயக்கத்தில் விஜய் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் நீண்ட நாட்களாகவே விரும்பி வந்ததை தொடர்ந்து, ஹரி - விஜய் தரப்பில் கடந்த சில ஆண்டுகளாகவே பேச்சு வார்த்தை நடந்து வந்தது. தற்போது இருவரும் ஒரு படத்தில் இணைவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related News

2342

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

மே 15 ஆம் தேதி வெளியாகும் ‘எக்ஸாம்’ (Exam) தொடர்!
Monday April-27 2026

வால்வாட்சர்  ஃபிலிம்ஸ் (Wallwatcher Films) நிறுவனத்தின் சார்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் A...

Recent Gallery