அஞ்சலி - ஜெய் இருவரும் காதலிக்க, நடுவில் ஜனனி ஐயர் எப்படி!, என்று யோசிக்காதிங்க, அஞ்சலி ஜெய்யை நிஜத்தில் காதலிக்கிறார் என்றால், ஜனனி ஐயர் படத்தில் காதலிக்கிறார். ஆம், ‘பலூன்’ திரைப்படன் அஞ்சலியுடன் மற்றொரு நாயகியாக ஜனனி ஐயரும் நடிக்கிறார்.
1980 ஆம் ஆண்டு பின்னணியில், கொடைக்கானலில் வாழும் ஒரு பெண் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஜனனி ஐயர், மிகவும் கட்டுக்கோப்பான ஜெய்யை காதலிக்கும் வேடத்தில் நடித்திருக்கிறாராம். அவரது வேடம் குறித்து இயக்குநர் சினிஷ், அவரிடம் கூறிய போது ‘மூன்றாம் பிறை’ படத்தில் ஸ்ரீதேவி நடித்த வெகுலித்தனமாக நடிக்க வேண்டும் என்று சொன்னாராம்.
காலம் தாண்டியும் ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கும்படி ‘மூன்றாம் பிறை’ படத்தில் ஸ்ரீதேவி கதாபாத்திரம் இருக்கிறது. அவரது நடிப்புக்கு ஈடு இணையாக நடிக்கவே முடியாது, என்று ஜனனி ஐயர் தனது மனதுக்குள் சொல்லிக் கொண்டாலும், ஸ்ரீதேவியின் நடிப்பை பார்த்துவிட்டு படப்பிடிப்பில் கலந்துக்கொண்டு, சிறப்பாக நடித்து முடித்தாராம்.
இதுவரை தான் நடித்த கதாபாத்திரங்களில், தன்னை மிகவும் கவர்ந்த கதாபாத்திரம் ‘பலூன்’ படத்தின் கதாபாத்திரம் தான் என்று கூறும் ஜனனி ஐயர், நிச்சயம் ரசிகர்களிடம் இந்த கதாபாத்திரம் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்றும் கூறியுள்ளார்.
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...