காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சென்னையில் நடிகர் நடிகைகள் மவுன போராட்டம் நடத்தினார்கள். இதில் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட சினிமாத் துறையைச் சேர்ந்த பலர் கலந்துக்கொண்டனர்.
இந்த நிலையில், இன்று திடீரென்று இயக்குநர் பாரதிராஜா தலைமையில், இயக்குநர்கள் அமீர், ஆர்.கே.செல்வமணி, நடிகர் சத்யராஜ் உள்ளிட்ட பலர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய பாரதிராஜா, தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை, தொடங்கப்பட்டு இருப்பதாக கூறியதோடு, இந்த பேரவைக்கு எந்த அரசியல் அடையாளமும் கிடையாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, அரசியல் சாயத்தை கலைத்துவிட்டு தமிழனாக ஒன்று கூடுங்கள், என்று தெரிவித்தார்.
மேலும், ஐபிஎல் போட்டியை தள்ளி வைப்பதில் சட்ட சிக்கல் இருப்பதாக முதல்வர் கூறியுள்ளார். காவிரி போராட்டத்தை திசை திருப்பவே ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படுகிறதோ என்ற ஐயம் உள்ளது. எனவே, ஐபிஎல் போட்டியை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும், என்றும் தெரிவித்தார்.
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...
வால்வாட்சர் ஃபிலிம்ஸ் (Wallwatcher Films) நிறுவனத்தின் சார்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் A...