வட இந்தியாவில் பிரபலமாக இருக்கும் தொலைக்காட்சியான கலர்ஸ் தமிழில் கால்பதித்தவுடன், எப்படியாவது ரசிகர்களை கவர்ந்துவிட வேண்டும் என்று பல வித்தியாசமான நிகழ்ச்சிகளை தயாரித்ததுடன், வழக்கமான சீரியல்களையும் ஒளிபரப்பி வருகிறது.
அந்த சேனலின் முக்கியமான நிகழ்ச்சியாக தற்போது ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றிருக்கும் நிகழ்ச்சி ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சியாகும். 35 வயதுக்கு மேல் ஆகி, பல நடிகைகளுடன் காதல் கிசு கிசுவில் சிக்கி இன்னமும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் நடிகர் ஆர்யா, இந்த நிகழ்ச்சியின் மூதல் திருமணம் செய்துகொள்ளப் போகிறார், என்பது தான் இந்த நிகழ்ச்சியின் ஸ்பெஷல்.
ஆர்யாவை திருமணம் செய்துகொள்ள விரும்பும் பெண்கள் பலர் போட்டியில் கலந்துக்கொள்ள ஆர்வம் காட்ட அவர்களிடல் 18 பேரை தேர்வு செய்த நிகழ்ச்சி குழு, அனைவரையும் ஆர்யாவுடன் வெவ்வேறு விதமாக பழகவிட்டார்கள். போட்டியின் இறுதியில் யார் வெற்றி பெறுகிறாரோ அவரே ஆர்யாவின் மனைவி என்பது தான் நிகழ்ச்சியின் கான்சப்ட்.
இதனாலேயே இந்த நிகழ்ச்சியை பலர் ஆர்வத்தோடு பார்த்து வந்த நிலையில், இந்த நிகழ்ச்சி பெண்களுக்கு எதிரானதாக இருக்கிறது என்று சிலர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளனர். சிலரோ, இவை அனைத்தும் மக்களை ஏமாற்றுவதற்கான டெக்னிக், இந்த நிகழ்ச்சி மூலம் ஆர்யா திருமணம் செய்துகொள்ள மாட்டார், என்றும் கூறி வந்தனர்.
இந்த நிலையில், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இப்போட்டியில் மூன்று போட்டியாளர்கள் மட்டுமே இருக்கிறார்கள். இவர்களில் ஒருவரை தான் ஆர்யா திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்று பலர் எதிர்ப்பார்த்திருக்க, இந்நிகழ்ச்சியின் இயக்குநர் பிரகாஷ், இது பெண்கள் தங்கள் வாழ்க்கை துணையை தேர்தெடுக்க கிடைத்த சுதந்திரம். இது முழுக்க முழுக்க போட்டியாளரின் விருப்பம் தான். கடைசியாக வெற்றி பெரும் போட்டியாளர் ஆர்யாவை வேண்டாம் என சொன்னால் திருமணம் நடக்காது, என கூறியுள்ளார்.
அப்படியானால் ஆர்யாவின் திருமணத்தை வைத்து தமிழக ரசிகர்கள் காதில் கலர் டிவி பூ வைத்துவிட்டது.
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...
திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைப்பட தயாரிப்பில் களம் இறங்குகிறது...
‘டாணாக்காரன்’ பட புகழ் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திற்கு ‘மார்ஷல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது...