Latest News :

வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் கஷ்ட்டப்பட்ட பிரபல நடிகை!
Tuesday April-10 2018

கிரிக்கெட் வீர டோனியின் வாழ்க்கை படமான ‘டோனி’ திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் திஷா பதானி. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான இந்திப் படம் ‘பாகி 2’ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. மேலும், சுந்தர்.சி இயக்கத்தில் உருவாக உள்ள ‘சங்கமித்ரா’ படத்திலும் இவர் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

 

இந்த நிலையில், சினிமாவில் நடிப்பதற்காக வாய்ப்பு தேடிய திஷா பதானி, வாடகை கொடுக்க முடியாமல் கஷ்ட்டப்பட்டதாக கூறியிருக்கிறார்.

 

இது குறித்து பேட்டி ஒன்றில் கூறிய அவர், “கல்லூரி படிப்பை விட்டுவிட்டு சினிமா நடிகையாகும் ஆசையில் நான் மும்பைக்கு தனியாக வந்தேன். வெறும் ரூ.500 தான் அப்போது என்னிடம் இருந்தது. அதுவும் செலவாகிவிட்டதால் கையில் காசு இல்லாமல் ரொம்ப கஷ்ட்டப்பட்டேன்.

 

வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாமல் கஷ்ட்டப்பட்ட நான், அதற்காகவே விளம்பர படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி அலைந்தேன். பிறகு சில வேலைகளை செய்து சம்பாதித்து வீட்டில் தூங்கினேன். இது தான் அப்போது எனது வாழ்க்கையாக இருந்தது.”என்று தெரிவித்துள்ளார்.

Related News

2365

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

மே 15 ஆம் தேதி வெளியாகும் ‘எக்ஸாம்’ (Exam) தொடர்!
Monday April-27 2026

வால்வாட்சர்  ஃபிலிம்ஸ் (Wallwatcher Films) நிறுவனத்தின் சார்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் A...

Recent Gallery