நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா நடத்தி வரும் ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, இயங்கிக் கொண்டிருக்கும் கட்டிடத்திற்கு சரியாக வாடகை தராத்தால், அக்கட்டடத்தின் உரிமையாளர் பள்ளியை பூட்டிவிட்டதாக தகவல் பரவியது.
ஆனால், இதனை மறுத்துள்ள பள்ளி நிர்வாகம், அக்கட்டத்தின் உரிமையாளர் பள்ளி நிர்வாகத்திடம் சுரண்டும் நோக்கில் இத்தகைய செயலை செய்திருப்பதாக கூறியுள்ளது.
இது குறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள விளக்க அறிக்கையில், நாங்கள் கிண்டியில் இருக்கும் எங்கள் பள்ளியை கடந்த 10 வருடங்களுக்கு மேலாக நடத்தி வருகிறோம்.
சமீபகாலமாக நில உரிமையாளரின் குடும்ப தகராறு காரணமாக நாங்கள் அவர்களிடமிருந்து அநேக தொந்தரவுகளை சந்தித்து வருகிறோம்.
இது வாடகை பற்றியது மட்டும் அல்ல, இது ஒரு சுரண்டல் மற்றும் அவர்கள் காரணமில்லாமலும், முறையற்ற நிலையிலும் வாடகைத் தொகையை நாங்கள் பேசிய தொகையைக் காட்டிலும் அதிகரித்துள்ளனர்.
நாங்கள் இது குறித்து ஏற்கனவே ஆலோசித்தது மட்டுமில்லாமல் அந்த இடத்தை காலி செய்வது குறித்தும் முடிவெடுத்துள்ளோம். மேலும் இப்பிரச்சனையை முடிப்பது தொடர்பான பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...