டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் வசூலிக்கும் அதிகப்படியான கட்டணத்தைக் கட்டுப்படுத்தவும், தியேட்டர்களில் டிக்கெட் விலையை ஒழுங்குப்படுத்துவதோடு, ரசிகர்களுக்கும் குறைவான கட்டணத்தில் திரைப்படங்களை திரையிடவும் நடவடிக்கையாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கடந்த 40 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகிறது.
அதே சமயம், தற்போதுள்ள டிஜிட்டல் சேவை நிறுவனங்களுக்கு மாற்றாக வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டு, குறைந்த கட்டணத்தில் டிஜிட்டல் சேவை பெறும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளது. அதன்படி, சில நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டிருக்கும் தயாரிப்பாளர்கள் சங்கம், சமீபத்தில் இ சினிமா டிஜிட்டல் சர்வீஸ் பெறுவதற்கான புதிய ஒப்பந்தத்தை ‘கே சேரா சேரா’ (K sera sera) நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறது.
வட இந்தியா முழுவதும் 1010 திரையரங்குகளில் டிஜிட்டல் சர்வீஸ் வழங்கும் மிகப்பெரிய நிறுவனமான ‘கே சேரா சேரா’ (K sera sera) தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நிர்ணயம் செய்த கட்டணத்தில் தமிழ்ப் படங்களுக்கு தியேட்டர்களில் இ சினிமா டிஜிட்டல் சர்வீஸ் தருவதோடு, டி.எப்.பி.சி-ன் இரண்டாவது மாஸ்டரிங் யூனிட்டாக செயல்படுவதற்கும் தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் ஒப்பந்தம் செய்துக்கொண்டது. இதன் மூலம் இ சினிமாவுக்கு இனி தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து மட்டுமே திரையரங்கங்களுக்கு நேரடியாக கண்டண்ட் கொடுக்கப்படும்.
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...