‘கயல்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான சந்திரன், நடிப்பில் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ படம் வெளியாக உள்ளது. மேலும் ‘பார்ட்டி’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். மேலும் சில படங்களில் நடித்து வரும் இவர், தொலைக்காட்சி தொகுப்பாளினி அஞ்சனாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
இந்த நிலையில், தன்னிடம் பேட்டி எடுக்க வரும் நிருபர்களிடம், “தயவு செய்து அஞ்சனா பற்றி மட்டும் கேட்காதீங்க” என்று சந்திரன் கண்டிஷன் போடுகிறாராம். அடடா...சந்திரனின் இந்த கண்டிஷனுக்கு பின்னாடி எதாவது பிரச்சினை இருக்குமோ, என்று பலர் நினைக்க, அவர் அப்படி சொல்வதற்கு காரணம், அவரை பேட்டி எடுக்க வருபவர்கள் அனைவரும் அஞ்சனாவுடனான அவரது காதல் கதையை கேட்பது தானாம். புதுசாக இருந்தால் பரவாயில்லை. கடந்த இரண்டு வருடங்களாக இதையே சொல்லி...சொல்லி....சந்திரன் ரொம்பவே சோர்ந்து போய்ட்டாராம்.
அதனால், தற்போது தன்னை பேட்டி எடுக்க வருபவர்களிடம், முதலில் அவர் சொல்லும் வார்த்தை, ”தயவு செய்து அஞ்சனா பற்றி மட்டும் கேட்காதீங்க” என்பது தானாம்.
பிரேக்கிங் பாயிண்ட் பிக்சர்ஸ் (Breaking Point Pictures) நிறுவனம் தயரிக்க எம்...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளர் - பாடகர்- இசை கலைஞரான 'ராக் ஸ்டார் ' அனிருத்தின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது...
இயக்குநர் மணிரத்னத்தின் சீடரான ஆர்...