காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஐபில் கிரிக்கெட் போட்டிக்கு எதிராகவும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது காவலர் ஒருவரை சிலர் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே, காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தி தென்னிந்திய நடிகர்கள் சங்கம் நடத்திய போராட்டத்தில் பங்கேற்காத சிம்பு, அதற்கான விளக்கம் அளிக்க பத்திரிகையாளர்களை கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தித்தார். அப்போது, காவிரி விவகாரத்தை வைத்து பலர் அரசியல் செய்கிறார்கள். இதனை உணர்ந்து கன்னட மக்கள் தமிழர்களுக்கு 11 ஆம் தேதி ஒரு டம்ளர் தண்ணீர் கொடுக்க வேண்டும். அதனை புகைப்படமாகவோ, வீடியோவாகவோ இணையத்தில் பதிவிட வேண்டும், என்று தெரிவித்தார்.
சிம்புவின் கருத்துக்கு வரவேற்பு தெரிவித்த கன்னட மக்கள் பலர் தமிழர்களுக்கு தண்ணீர் கொடுப்பது போன்ற வீடியோவையும், புகைப்படத்தையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். அவர்களது இத்தகைய நடவடிக்கைக்கு சிம்பு நன்றி தெரிவித்துள்ளார். அதேபோல், கன்னட அரசியல்வாதிகளும் சிம்புவை பாராட்டி வருகிறார்கள்.
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...
வால்வாட்சர் ஃபிலிம்ஸ் (Wallwatcher Films) நிறுவனத்தின் சார்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் A...