தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வரும் சமந்தாவிடம், நாக சைதன்யா குடும்பத்தினர் கவர்ச்சியாக நடிக்க கூடாது, காதல் காட்சிகளில் நெருக்கமாக நடிக்க கூடாது என்று கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர்.
இந்த நிலையில், சமந்தா முத்தத்திற்காக தயாரிப்பாளர் ஒருவர் ரூ.10 லட்சம் கொடுத்த தகவல் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராம்சரணுக்கு ஜோடியாக சமந்தா நடித்திருக்கும் ‘ரங்கஸ்தலம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இப்படம் மிகப்பெரிய வெற்றிப் பெற்றுள்ளது. இதுவரை உலகம் முழுவதும் ரூ.150 கோடியை வசூல் செய்திருக்கும் இப்படத்தின் இயக்குநர் சுகுமார், படப்பிடிப்பு அனுபவங்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்துக்கொண்டார்.
அப்போது, முத்தக் காட்சி ஒன்றை படமாக்க நினைத்தவர், அதை ராம்சரண் மற்றும் சமந்தாவிடம் கூறியிருக்கிறார். ஆனால் இருவரும் அதில் நடிக்க தயக்கம் காட்டியுள்ளனர். இருந்தாலும் காட்சியின் முக்கியத்துவத்தை இயக்குநர் விளக்கியதால் நடிக்க ஒப்புக்கொண்டவர்கள், அந்த காட்சியை நடித்து முடிக்க பல டேக்குகள் வாங்கினார்களாம். அதனால் நேரமும் வீணாகிக்கொண்டே இருந்ததாம். இதை பார்த்த தயாரிப்பாளர், “இந்த காட்சியை உடனடியாக படமாக்கி முடித்தால், உங்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு தருகிறேன்” என்று இயக்குநர் சுகுமாரிடம் கூறினாராம்.
உடனே, சமந்தா - ராம்சரணிடம் காட்சியின் எதார்த்தத்தை புரிய வைத்து சுகுமார் விளக்கினாராம். அதன் பிறகு சில நொடிகளிலேயே அந்த காட்சியில் இருவரும் சிறப்பாக நடித்து முடிக்க, காட்சி ஓகே ஆனதாம், இயக்குநர் சுகுமாருக்கும் ரூ.10 லட்சம் கிடைத்ததாம்.
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளர் - பாடகர்- இசை கலைஞரான 'ராக் ஸ்டார் ' அனிருத்தின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது...
இயக்குநர் மணிரத்னத்தின் சீடரான ஆர்...
ஆல்பம் பாடல்களான “கச்சி சேரா”, “ஆச கூடா”, “சித்திர புத்திரி” போன்ற சென்ஷேசனல் ஹிட் பாடல்களால், இசைத்துறையில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய சாய் அபயங்கர், இப்போது திரையுலகிலும் கலக்க ஆரம்பித்துள்ளார்...