சினிமாவிலும், அரசியலிலும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திய எம்.ஜி.ஆர்-ன் நடிப்பில் கடந்த 1958 ஆம் ஆண்டு வெளியான ‘நாடோடி மன்னன்’ மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்ததோடு, அந்த காலகட்டத்தில் வசூலில் இமாலய சாதனை செய்த திரைப்படமாகவும் திகழ்ந்தது.
எம்.ஜி.ஆர்-ன் இயக்கத்தில் வெளியான இப்படத்தின் கதையை ஆர்.எம்.வீரப்பன், வி.லெட்சுமணன், எஸ்.கே.டி.சாமி ஆகியோர் எழுத, சி.கருப்பசாமி, கே.ஸ்ரீனிவாசன், ப.நீலகண்டன் ஆகியோர் திரைக்கதை எழுதினார்கள்.
பி.எஸ்.வீரப்பா, எம்.என்.நம்பியார், பானுமதி, சரோஜாதேவி, எம்.என்.ராஜாம் என முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இப்படம் அப்போதைய காலகட்டத்திற்கு மிகப்பெரிய தொகையான ரூ.1.80 கோடி பட்ஜெட்டில் எம்.ஜி.சக்கரபாணி மற்றும் ஆர்.எம்.வீரப்பன் ஆகியோரால் எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டது.
எம்.ஜி.ஆர்-க்கு ரூ.11 கோடி வசூலைக் குவித்த இப்படம் தான் அவரது அரசியல் எழுச்சிக்கும் மாபெரும் துணையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி பல பெருமைகளைக் கொண்ட இப்படம் 60 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்பட டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதுப்பித்து வெளியிடப்பட்டது. எதிர்ப்பார்த்ததைப் போலவே எம்.ஜி.ஆர் ரசிகர்களின் அமோக ஆதரவோடு 25 நாட்களை கடந்து ரீ-ரிலீசிலும் வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறது.
இந்த வெற்றியை கொண்டாடும் விதத்தில், சமீபத்தில் சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார். அவருடன் ஏராளமான எம்.ஜி.ஆர் ரசிகர்கள் மட்டும் இன்றி ஏராளமான இளைஞர்களும் கலந்துக்கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...