வித்பாலன் நடிப்பில் வெளியான ஹிட் படம் தும்ஹரி சூலு. இப்படம் தற்போது தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இதில் வித்யா பாலன் ரோலில் நடிகை ஜோதிகா நடிக்கிறார். இப்படத்தை ராதா மோகன் இயக்குகிறார்.
இந்த நிலையில், இப்படத்தில் நடிக்கும் ஜோதிகாவிற்கு கணவராக நடிகர் விதார்த் முதன் முறையாக நடிக்கவுள்ளார். சினிமாவில் தொடர்ந்து போராடி வரும் விதார்த்திற்கு எந்த படமும் நல்ல ஹிட் கொடுக்கவில்லை. எனினும், இப்படம் அவருக்கு கை கொடுக்கும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறார்.
இப்படம் தொடர்பாக இயக்குநர் ராதா மோகன் கூறுகையில், ”எப்போதும் போன்று இது ஹீரோ ரோல் கிடையாது. இப்படத்திற்குரிய ஹீரோவை தேடினோம். அப்போது, தான் இளம் நடிகர்களில் விதார்த் தான் இப்படத்தின் கதாபாத்திரத்திற்கு சரியானவர் என்று தேர்வு செய்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.
வ. கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தில் வ...
’கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், தற்போது நாயகனாக பலதரப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்று வருகிறார்...
சன்லைட் மீடியா எழுமலை ஏ.எஸ்...